Advertisment

ரயில்வே துறையில் மிகப் பெரிய சீர்திருத்தம்: மத்திய அரசு முடிவு

இந்த திட்டம் ரயில்வே அமைச்சகத்தின் கட்டமைப்பு மற்றும் விநியோகம் பற்றி ஆய்வு செய்த பிறகு முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தயாரித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

author-image
WebDesk
New Update
railway

இந்தியன் ரயில்வே ஒரு மிகப் பெரிய மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுக்க உள்ளது. தனது பழமையான பல நிறுவனங்களை ஒன்றிணைத்தல், அதன் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்துவதில் தனியார் பங்கேற்புகள் போன்றவையால் முக்கிய நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுக்கிறது.

Advertisment

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டை IRCONனில் இணைப்பது, IRCTC உடன் ரயில்டெல் இணைப்பது, பிரைத்வெய்ட் நிறுவனத்தை RITES கையகப்படுத்துவது உள்ளிட்ட தொடர் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அமைச்சரவை செயலகம் ரயில்வே அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த திட்டங்கள் ரயில்வே அமைச்சகத்தின் கட்டமைப்பு மற்றும் விநியோகம் பற்றி ஆய்வு செய்த பிறகு நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தயாரித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

இந்த அறிவிப்புகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல. ரயில்வேத்துறையால் நடத்தப்படும் 94 பள்ளிகளை கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) கீழ் கொண்டு வருதல், 125 ரயில்வே மருத்துவமனைகளை மேம்படுத்தி பொதுமக்களுக்காக திறப்பது போன்ற அம்சங்களும் உள்ளன. பொருத்தமான இடங்களில், ரயில்வேயால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான PPP (பொது-தனியார் கூட்டாண்மை) மாதிரியை அறிக்கை பரிந்துரைக்கிறது. இது ரயில்வே சேவையை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் அதன் முக்கிய திறனில் கவனம் செலுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.

ரயில்வேத்துறைக்கு சமீபத்தில் அனுப்பப்பட்ட குறிப்பில், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல்களை தெரிவிக்கும்படி இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுனீத் சர்மாவிடம் அமைச்சரவை செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு வாரத்திற்கு முன்பு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இப்போது அனைத்து முக்கிய துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் ரயில்வே வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களுடனும் தீவிர விவாதம் தேவை" என்றார்.

பொதுத்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை பொறுத்தவரையில், IRCON ஒரு சிறப்பு உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனம் மற்றும் RVNL விரைவுப் பாதையில் ரயில் உள்கட்டமைப்புத் திறனை உருவாக்க மற்றும் அதிகரிக்க திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம். இவை இரண்டுமே ஒரே வணிக செயல்பாடுகளைக் கொண்டுள்ளது என சன்யாலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் RVNL ஐ IRCON இல் இணைக்க முடியும் என கூறுகிறது.

ரயில்வே அமைச்சகத்தின் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல் நாடு முழுவதும் ரயில்வே பாதையை ஒட்டி கண்ணாடி இழை கம்பிகளை (Optic Fiber Cable) அமைத்துள்ளது. அதோடு பிராட்பேண்ட் மற்றும் மல்டி மீடியா சேவையையும் அளித்து வருகிறது. இதன் முக்கிய செயல்பாடு இணைய டிக்கெட், ரயில்வே தகவல் மையம் அமைப்புகள்(CRIS), பயணிகள் டிக்கெட், சரக்கு விலைப்பட்டியல், பயணிகள் ரயில் செயல்பாடுகளுக்கான மென்பொருளை உருவாக்க உதவுகிறது. ஐஆர்சிடிசி -யிடம் அதன் பணியை ஒப்படைத்த பிறகு CRIS முடிவடையும். பின்னர் ரயில் டெல் ஐஆர்சிடிசி -யில் இணைக்கப்பட வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது.

சென்னை, கபுர்தலா மற்றும் ரே-பரேலி ஆகிய இடங்களில் உள்ள மூன்று ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகளையும், சித்தரஞ்சன், வாரணாசி மற்றும் பாட்டியாலாவில் உள்ள ரயில் இன்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை, மற்றும் யெலஹங்கா (பெங்களூரு) மற்றும் பீகார் மாநிலம் பேலா ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ரயில் சக்கர தொழிற்சாலையை நடத்த புதிய பொதுத்துறை நிறுவனத்தை அமைக்க அறிக்கையில் கோரப்பட்டது. அனைத்து சொத்துகளும் இந்த CPSEக்கு மாற்றப்படலாம். இந்த நிறுவனத்திற்கு ஊழியர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள்.

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். காலியாக உள்ள ரயில்வே நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருவாய் ஈட்டிக் கொடுப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஆணையம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து முக்கிய ரயில்நிலையங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. Indian Railway Stations Development Corporation Ltd (IRSDC) என்பது RLDA மற்றும் IRCON ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். சன்யால் அறிக்கை கூறுகையில், ஒன்று மட்டுமே செயல்படும் நிறுவனமாக அடையாளம் காணப்பட்டு முழுப் பொறுப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

சேவை அடிப்படையில் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வீடு வழங்கும் அமைப்பான இந்திய ரயில்வே நல அமைப்பில் ரயில்வே வாரியம் மற்றும் ரயில்வே அமைச்சகம் நேரடி ஈடுபாட்டை விலக்க வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரும்பாலான இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஒரு சில அதிகாரிகள் நலன்களுக்காகவே செயல்பட்டன என கூறினார். மற்றொரு அதிகாரி, இந்த சங்கங்கள் பலவற்றில், தொடக்க கட்டத்தில் ஒரு குறிக்கோள் இருந்திருக்கலாம், ஆனால் அவற்றின் உருவாக்கம் என்பது இரயில்வேயில் உள்ள துறை ரீதியான பிரிவுகளே ஆகும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment