உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதங்களில், பல கட்டங்களாக விமான சேவைகள் இயக்கப்படும் என்று மூத்த அரசு மற்றும் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, விமான சேவைகளின் மறுத் தொடக்கத்திற்கான பாதுகாப்பு மற்றும் கொள்கை நடவடிக்கைகளில் அரசு நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
Advertisment
விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில், " கோவிட் -19 பெருந் தொற்று நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பணியாளர்களால் சோதனை செய்த பின், பயணிகளின் போர்டிங் பாஸ் முத்திரையிடும் நடைமுறை அடுத்த உத்தரவு வரும் வரை கைவிடப்படுகிறது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .
Advertisment
Advertisements
பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பயணத்தின் போது சமூக விலகல் நெறிமுறையை கையாள்வதற்கும் பின்பற்ற வேண்டிய வரைவு நிலையான இயக்க நடைமுறையை(SOP) மத்திய அரசு தயாரித்துள்ளது. விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், தரை கையாளுதல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகின்றன. ஆரோக்யா சேது பயன்பாட்டைப் உறுதி செய்தல், விமான நிலையங்களில் பயணிகள் புகாரளிக்கும் நேரத்தை அதிகரித்தல், இணைய வழி மூலமாக கட்டாய சோதனை போன்றவைகள் முக்கிய அம்சங்களாக பேசப்படுகிறது.
உள்நாட்டு விமானங்களுகான முன்பதிவு சேவையை தொடங்குவதற்கான உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு உள்நாட்டு விமான அமைச்சகம் காத்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான சேவைகளுக்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதால் பல்வேறு மாநிலங்களுடன் மத்திய அரசு கலந்துரையாடி வருகிறது என்றும் தெரிவித்தார்.
"ஆரம்பத்தில், சில பசுமை மண்டல மாவட்டங்களில் மட்டும் விமான சேவைகள் அனுமதிக்கப்படலாம். இருப்பினும், சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டல பகுதிகளில் தான் பெரும்பாலான முக்கிய போக்குவரத்து மையங்கள் உள்ளன. எனவே, மாநில அரசுகளின் தயார் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்தில் ஏர் இந்தியா மூலம் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். வந்தே பாரத்இயக்கத்தின் கீழ், ஏர் இந்தியா அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸும் இணைந்து 12 நாடுகளுக்கு மொத்தம் 64 விமானங்களை இயக்கி வருகின்றன. இந்த இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 31 நாடுகளைச் சேர்ந்த 30,000 இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கும் விமான நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முன்பதிவு சேவையைத் தொடங்குவதற்கு முன், தொழில்நுட்ப ரீதியில் தயாராக எங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் கிடைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்காவது பொது முடக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டவுடன் சில தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்," என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நிர்வாகி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil