மத்தியப் பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் ஜே.எஸ். சௌஹான், சிறுத்தைகளை இடமாற்றம் செய்வதற்காக மாநில அரசு கடந்த இரண்டு மாதங்களில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (என்.டி.சி.ஏ) பல கோரிக்கைகளை முன்வைத்ததை உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம், மத்திய பிரதேசத்தின் குனோவில் மூன்று சிறுத்தைகள் இறந்தது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், அரசியலுக்கு அப்பாற்பட்டு, சில சிறுத்தைகளை ராஜஸ்தானுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
"இத்தனை சிறுத்தைகளுக்கு குனோ போதுமானதாக இல்லை என்று தோன்றுகிறது… ராஜஸ்தானில் பொருத்தமான இடத்தை நீங்கள் ஏன் தேடக்கூடாது? ராஜஸ்தானில் (ஒரு) எதிர்க்கட்சி ஆட்சி செய்வதால் அதை நீங்கள் பரிசீலிக்க மாட்டீர்கள் என்று அர்த்தமல்ல” என்று நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் மத்திய அரசிடம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி நமீபியாவுடன் சிறுத்தைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டவுடன், ஆகஸ்ட் 8-ம் தேதி ராஜஸ்தான் வனத்துறை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (என்.டி.சி.ஏ) கடிதம் எழுதியது, என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. முகுந்த்ராவில் சில சிறுத்தைகளை மாற்ற முன்மொழிந்த சிறுத்தைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2020-ல் உச்ச நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டது. அதையும் மத்திய அரசு நிராகரித்தது.
என்.டி.சி.ஏ ஆகஸ்ட் 24-ல் அளித்த பதிலில் எழுதியது, “புலிகள் காப்பகத்தின் மேலாண்மை நோக்கங்கள் வேறுபட்டவை மற்றும் புலிகளின் எண்ணிக்கையை கட்டியெழுப்ப நிர்வாக முயற்சிகள் நடந்து வருகின்றன… இந்த நேரத்தில், முகுந்த்ரா மலை புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை நிறுவுவதற்கான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் கூர்மையான கேள்விக்கு, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, அனைத்து சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் ஜே.எஸ். சௌஹான், சிறுத்தைகளை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு கடந்த இரண்டு மாதங்களில் என்.டி.சி.ஏ-விடம் பல கோரிக்கைகளை முன்வைத்ததை உறுதிப்படுத்தினார். “குனோவில், இடம் மற்றும் தளவாடம் இரண்டும் பிரச்னை” என்று ஜே.எஸ். சௌஹான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இது குறித்து கருத்து கேட்பதற்கு என்.டி.சி.ஏ உறுப்பினர் - செயலாளர் எஸ்.பி. யாதவ் பதிலளிக்காத நிலையில், அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “இல்லை என்று சொன்ன பிறகு, சிறுத்தை குழு மறுபடி மீண்டும் மாநிலத்திற்கு (ராஜஸ்தான்) செல்ல தயக்கமாக இருந்தது” என்றார்.
ராஜஸ்தான் தனது சிறுத்தை திட்டத்தை பின்பற்றுகிறதா என்ற கேள்விக்கு, மாநில தலைமை வனவிலங்கு வார்டன் அரிந்தம் தோமர், தற்போது எந்த திட்டமும் இல்லை என்று கூறினார். ராஜஸ்தான் சமீபத்தில் முகுந்த்ராவிற்கு காட்டு நாய்கள் மற்றும் காளைகளை (இந்திய காட்டெருமை) கொண்டு வந்ததற்காக என்.டி.சி.ஏ முன்பு வழக்கு தொடர்ந்தது. “அதற்கு இன்னும் அனுமதி இல்லை” என்று தோமர் கூறினார்.
2013-ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட முகுந்த்ரா 2018-ம் ஆண்டில் ராந்தம்போரில் இருந்து 82 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட 12 அடி உயர அடைப்புக்கு மாற்றப்பட்டபோது அதன் முதல் புலிகளைப் பெற்றது. இந்த காப்பகம் நான்கு பெரிய புலிகளையும் மூன்று குட்டிகளையும் இழந்துவிட்டது, இப்போது ஒரு தனியான புலியுடன் எஞ்சியுள்ளது. ஆனால் 2017-ல் கட்டப்பட்ட அடைப்பு முகுந்த்ராவை அரசாங்கத்தின் சிறுத்தைகள் செயல் திட்டத்தில் சாத்தியமான தளங்களில் ஒன்றாக மாற்றியது.
“சில சிறுத்தைகள் முகுந்த்ராவின் அடைப்பில் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்படலாம் ம.பி-யில், சிறுத்தைகளுக்காக காந்திசாகரை (வனவிலங்கு சரணாலயம்) தயார் செய்து வருகிறோம். ஆனால், இப்பகுதியை மேம்படுத்த குறைந்தது ஒரு வருடம் தேவைப்படும். அந்த நேரத்தில், குனோ மிகைப்படுத்தப்பட்டிருக்கும்” என்று போபால் தலைமையகத்தில் உள்ள வன அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறுத்தைகள் செயல் திட்டம் 2022-ன் படி, குனோவில் 23 சிறுத்தைகளுக்கு இடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகளும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 18-ம் தேதி தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளும் வந்தன. மார்ச் 27-ம் தேதி முதல் சிறுத்தை இறந்ததாக அறிவிக்கப்பட்ட மறுநாள், குனோவில் நான்கு குட்டிகள் பிறந்தன. ஏப்ரல் 23 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு சிறுத்தைகள் இறந்தன. மேலும், சிறுத்தைகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
சிறுத்தைகள் திட்டத்தை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் தலைவரான எம்.கே. ரஞ்சித்சிங், முகுந்த்ரா வாய்ப்பை அமைச்சகம் பயன்படுத்தாததற்கான காரணத்தை தன்னால் யோசிக்க முடியவில்லை என்றார்.
“ராஜஸ்தான் வழங்கிய முகுந்த்ராவில் சிறுத்தைகளை விடுவிக்க நான் பலமுறை பரிந்துரைத்து வருகிறேன். ஐந்து வகையான சிறுத்தை இரையுடன் சிறுத்தையைப் பெற முகுந்தராவின் பெரிய அடைப்பு தயாராக உள்ளது. இது நமீபியன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய நிபுணர்களால் சிறுத்தைகளுக்கான சிறந்த பாதுகாப்பு இனப்பெருக்க தளமாக சான்றளிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சகம் இதை எடுத்துக் கொள்ளவில்லை, அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.