புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1800 முதல் 1900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.” என விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி எம்பி ரவிக்குமார் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அளித்த பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் தொகுப்புகளை டிஜிட்டல் மயமாக்கி, அவற்றை ஆன்லைனில் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா, அப்படியானால், செயல்படுத்துவதற்கான காலக்கெடு தொடர்பான விவரங்களைத் தருக.
புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தை மேலும் மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நுட்பங்களை மேம்படுத்தவும் அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் அதற்கென அனுமதிக்கப்பட்ட தொகையின் விவரங்களையும் தருக;
புதுச்சேரி ஆவண மையத்தின் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதற்காக தனியார் காப்பக சேகரிப்புகள், பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள், வரலாற்று ஆவணங்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விவரங்களைத் தருக;
புதுச்சேரி ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ள காப்பகப் பதிவுகளுடன் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஈடுபாட்டை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும், அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளைப் பற்றிய விவரங்களையும் தருக ஆகிய வினாக்களை விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி எம்பி ரவிக்குமார் எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் காப்பக சேகரிப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி ஏற்கனவே மார்ச் 28, 2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு இரண்டு ஆண்டுகள் ஆகும். பாதுகாத்தல், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் பயனர்களுக்கு உதவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தில் உள்கட்டமைப்பும் , மையத்தை அறிவியல் முறையில் நவீனமயமாக்கும் பணிகளும் செயல்படுத்தப்படுகின்றன. ஆராய்ச்சி அறைகள், பாதுகாப்பு அறைகள், டிஜிட்டல் மயமாக்கல் அறைகள், அனைத்து களஞ்சியங்களும் அவ்வப்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதற்காக CPWD, புதுச்சேரி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி ஆவணக் காப்பு மையத்தின் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியை NAI தொடங்கியுள்ளது. இவற்றை அபிலேக் படால் ( Abhilek Patal) போர்ட்டலில் பதிவேற்றம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்தவொரு பயனரும் மெட்டா தரவைக் கண்டுபிடிக்கும் வகையில் டிஜிட்டல் மயமாக்கலை நிறைவு செய்வதை NAI இலக்காகக் கொண்டுள்ளது. ஆய்வு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைத்துப் பதிவுகளையும் கேட்டு அபிலேக் படாலின் வலை போர்ட்டலை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.