கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ள சவுத் பிளாக்கில் ஏற்கனவே உள்ள கட்டடங்கள் திட்டப்படி முதலில் இடிக்கப்படும். பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றிற்கான புதிய நான்கு மாடி கட்டிடம் மற்றும் புதிய இரண்டு மாடி ‘இந்தியா ஹவுஸ்’ ஆகியவற்றை 24 மாதங்களுக்குள் கட்டுவதற்கு மத்திய அரசு ஏலம் கோரியுள்ளது.
திட்டமிட்டபடி, கட்டிடங்கள் கட்ட கட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ஏற்கனவே சவுத் பிளாக்கில் உள்ள கட்டடங்கள் முதலில் இடிக்கப்படும். பிரதமரின் புதிய இல்லம் மற்றும் அலுவலகம், சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 2022 நிறைவு இலக்கை தாண்டி செல்லும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 4ம் தேதி தெரிவித்துள்ளது. மத்தி அரசின் பொதுப் பணித்துறை குறிப்பிட்டுள்ள காலப்படி, பிரதமரின் இல்லம் டிசம்பர் 2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அது மாற உள்ளது.
பிரதமர் அலுவலகம் மற்றும் நிர்வாக வளாக அலுவலக கட்டிடங்களை கட்டப்படுவதற்கு முன்மொழியப்பட்ட இடங்கள் தற்போது பாதுகாப்பு நிறுவன அலுவலக கட்டிடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவை புதுடெல்லியில் உள்ள கேஜி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவிற்கு மாற்றப்படுகின்றன.
மத்திய பொதுப்பணித் துறை, சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்திற்கான அனுமதி முகமை, ரூ.1,171 கோடி செலவில், பிரதமர் அலுவலகம், இந்திய மாளிகை, அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிர்வாக அலுவலகங்கள் கட்டிடங்களின் கட்டுமானத்திற்கான முன் தகுதி ஏலங்களை செவ்வாய்க்கிழமை கோரியுள்ளது.
“இந்த இடம் தற்போதுள்ள சவுத் பிளாக்கின் தெற்குப் பகுதியில் கட்டிடத்தின் எண் 36/38-ல், உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ளது. புதிய கட்டுமானம் தொடங்கும் முன் கட்டிட எண் 36/38-ல் இருக்கும் கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள சுற்றுச் சுவரையும் இடித்துவிட்டு, பொதுப்பணித் துறையால் வழங்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் வரைபடங்களின்படி புதிய சுற்றுச் சுவர் கட்டப்பட வேண்டும்” என்று டெண்டர் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, வெளிநாட்டு பிரமுகர்களுடன் சந்திப்புகளை நடத்த ‘இந்தியா ஹவுஸ்’ பயன்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்ட அலுவலக கட்டிடங்கள் உறுதியான சிமென்ட் கான்கிரீட் கட்டமைப்பு கொண்ட கட்டிடமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. “தேவை இருந்தால் மரங்களை வேருடன் பெயர்த்து புதிய இடத்தில் நடப்பட வேண்டும். தற்போதுள்ள சேவைகள் ஏதேனும் இருந்தால், தேவை இருந்தால் அங்கே மாற்றப்பட வேண்டும். நிலநடுக்க மண்டலம் V-ஐக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
முன்மொழியப்பட்ட கட்டிடத்தின் மொத்த பரப்பளவு தோராயமாக 87,915 சதுரமீட்டராகும். இதில் அடித்தளப் பரப்பளவு தோராயமாக 20,879 சதுரமீட்டராகும். இந்த திட்டத்தின் கீழ், சவுத் பிளாக் அருகே 15 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதமரின் புதிய இல்லம் கட்டப்பட உள்ளது.
இந்த திட்டத்தைக் கவனிக்கும் மனித இணைப்புத் திட்டம் (HCP) ஆலோசனை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் இல்லத்துக்கான வடிவமைப்பு இன்னும் அதன் கருத்தாக்க நிலையில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்திருந்தார். “ஒரு இடத்தில் நவீன மற்றும் மிகவும் செயல்பாட்டு வசதிகளை வழங்குவது, உள்கட்டமைப்பின் பணி சுமையைக் குறைப்பது மற்றும் நகர போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவது ஆகியவை விரிவான குறிக்கோள்களாக உள்ளன” என்று HCP செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த என்கிளேவ், “உறுதியான வசதிகளுடன் கவனமாக திட்டமிடப்பட்ட பல்வேறு துறைகளை உருவாக்குவதன் மூலம் திறனையும் செயல்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று இந்த டெண்டர் கூறுகிறது. இது என்கிளேவ் மற்றும் சென்ட்ரல் விஸ்டாவில் உள்ள மற்ற அலுவலகங்களுடன் முதன்மையான பாதுகாப்பையும் சிறந்த ஒன்றுடன் ஒன்று உள்ள தொடர்பையும் உறுதி செய்யும். இந்த துறைகளை இடமாற்றம் செய்வது, சென்ட்ரல் விஸ்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பொதுமக்களின் தினசரி நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் விஐபிகள் மற்றும் விவிஐபிகளுக்கான திறமையான பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்யும்” என்று இந்த டெண்டர் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“