சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய அருங்காட்சியகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. தற்போது விரிவாக்கம் மற்றும் விரிவான தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஜான்பாத்தில் தற்போதைய வளாகத்தில் குறைந்த பட்சம் 5 அல்லது 6 வருடங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேம்படுத்தல் மற்றும் தயாரிப்பிற்கான இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டை இலக்காகக் கொண்டுள்ளது, அப்போது பல மாநிலங்களின் தலைவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் டெல்லிக்கு வருவர் . அருங்காட்சியகத்தை நாட்டின் கலாச்சார காட்சிப் பொருளாக மாற்றுவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அருங்காட்சியகத்தின் தயாரிப்பின் ஒரு பகுதியாக புதிய காசி கேலரி உருவாக்கப்படுகிறது. ஆடிட்டோரியம் மேம்படுத்தப்படும், மேலும் மத்திய ஆசிய தொல்பொருட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கேலரி ஐ.ஐ.டி-பம்பாயின் உதவியுடன் விரிவுபடுத்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும்.
இந்த அருங்காட்சியகத்தில் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் அரிய ‘கம்பெனி ஓவியங்கள்’ உட்பட 17,000 ஓவியங்கள் உள்ளன, அவை இப்போது காட்சிக்கு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மார்ச் 2020 முதல் மியூசியம் மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் விரிவாக்க பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடிவடையும், என்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அருங்காட்சியகம் திறக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கோவிட்-19 சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) அதன் தலைமையகத்தை திலக் மார்க்கில் உள்ள தரோஹர் பவனுக்கு மாற்றிய பின்னர், ஜான்பாத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தை ஒட்டியுள்ள ஏ.எஸ்.ஐ.யின் பழைய கட்டிடம் இருந்தது. தற்போது அது பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் இப்போது தேசிய அருங்காட்சியகத்தின் களஞ்சியத்திலிருந்து அரிய புத்த கலைப்படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காசி கோயில் நடைபாதை திட்டத்தின் ஒரு பகுதியாக வாரணாசியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல பெரிய மற்றும் சிறிய கோயில்கள் வெளிவந்தன. புதிய கண்டுபிடிப்புகளை வைத்து அருங்காட்சியக கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகம் நிறுவனம் இப்போது காசி கேலரியை உருவாக்கும்.
மத்திய விஸ்டா கட்டுமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு இறுதியில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி கட்டிடங்களுக்கு நகர்த்தப்படும்.
இருப்பினும், அருங்காட்சியகத்தின் சேகரிப்பை பட்டியலிடுதல், 3 டி ஸ்கேனிங் மற்றும் கண்டுபிடிப்பதற்கான செயல்முறை நடந்து வருகிறது. அருங்காட்சியகத்தின் சேகரிப்பு மற்றும் காட்சிகள் ராஜ்பாத்துக்குச் சென்றதும் ஜனபத்தில் உள்ள தற்போதைய கட்டிடத்திற்கு என்ன ஆகும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
ஜான்பாத்தில் உள்ள தற்போதைய தேசிய அருங்காட்சியகம் 1949 இல் நிறுவப்பட்டது, மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன. ஓவியங்கள், ஜவுளி, நாணயங்கள், கலைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள். இவை பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்தவை, ஆனால் சில வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தது, மேலும் 5,000 ஆண்டுகளுக்கும் மேலான மனித நாகரிகத்தை உள்ளடக்கியது.
1930 களில், டெல்லி எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் கட்டப்பட்டபோது, வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. சவுத் பிளாக் பிரதமரின் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சகங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் வடக்கு பகுதி உள்துறை மற்றும் நிதி அமைச்சகங்களை கொண்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்கான புதிய இடம் பெரியதாக இருக்கும். இப்போது கிடைக்கும் 35,000 சதுர மீட்டருக்கு மாறாக 1,67,000 சதுர மீட்டர் இடம் கிடைக்கும். சேகரிப்பின் இயக்கம் ஒரே நேரத்தில் நடக்கும்,
அருங்காட்சியகத்தின் புதிய இடத்தில் பல புதிய காட்சியகங்கள் இருக்கும், அவற்றில் இசை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், இந்திய அறிவு அமைப்பு மற்றும் வசனங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். அருங்காட்சியகத்தின் அடையாளத்தின் தொடர்ச்சியைப் பராமரிக்க, புதிய இடம் தேசிய அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”