18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, கோ-வின் ஆன்லைன் தளம் மூலம் மட்டுமே தடுப்பூசி பெறுவதற்கு பதிவு செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி கொரோனா தடுப்பூசி மையங்களில் நேரடியாக பதிவு செய்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு திங்கட்கிழமையன்று மாற்றி அறிவித்துள்ளது.
இருப்பினும், பல மாநிலங்கள் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி தளங்களை மூடவோ அல்லது குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி தளங்களை இயக்கவோ நிர்பந்திக்கப்படுவதால், நேரடியாக தடுப்பூசி மையங்களில் பதிவுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதுவரை, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி பதிவுகள் மட்டுமே நேரடியாக தடுப்பூசி மையங்களில் அனுமதிக்கப்பட்டன. 18-44 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாயமாக கோ-வின் தளம் மூலம் மட்டுமே தடுப்பூசி பதிவுகளை செய்ய வேண்டும்.
ஆன்லைன் தளம் மூலம் தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நேரடியாக சென்று தடுப்பூசிக்கு பதிவு செய்யும் வசதி தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு கிடையாது. மேலும் தனியார் மையங்கள் தங்களது தடுப்பூசி அட்டவணையை ஆன்லைன் சந்திப்புகளுக்கான இடங்களுடன் பிரத்தியேகமாக வெளியிட வேண்டும், என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
18-44 வயதுடையவர்களுக்கு அரசு தடுப்பூசி தளங்களில் ஆன்சைட் பதிவு மற்றும் நியமனங்களை அனுமதிக்கும் முடிவு மாநிலங்கள் அளித்த பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் மற்றும் குழு பதிவுகளுக்கு திறப்பதற்கான இறுதி முடிவு மாநிலங்களின் கையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்க தளங்களில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆன்லைன் நியமனங்கள் குறித்த கொள்கையை மாற்றும் போது இரண்டு அம்சங்களைக் கருத்தில் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதலாவதாக, ஆன்லைன் ஸ்லாட்டுகள் மூலம் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட அமர்வுகளின் விஷயத்தில், பயனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வராவிட்டால், பயன்படுத்தப்படாத அளவுகள் இருக்கலாம். "இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தடுப்பூசி வீணாவதைக் குறைக்க ஒரு சில பயனாளிகள் தடுப்பூசி மையங்களிலே பதிவு செய்வது அவசியம்" என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இரண்டாவதாக, இணையம் அல்லது ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாத பயனாளிகள் “தடுப்பூசிக்கு இன்னும் குறைந்த அணுகலைக் கொண்டிருக்கலாம்” என்ற உண்மையை மத்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய அம்சம் "அந்தந்த மாநிலங்களின் முடிவின் அடிப்படையில்" மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகவும், தகுதிவாய்ந்த 18-44 வயதுடைய பயனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வசதியாகவும் உள்ளூர் சூழலின் அடிப்படையில் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆன்-சைட் பதிவுகள் அல்லது வசதிகளை பதிவுசெய்தல் மற்றும் நியமனங்கள் குறித்து அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்ய வேண்டும். என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
18-44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நேரடியான பதிவுசெய்தல் மற்றும் நியமனம் ஆகியவற்றைத் திறக்கும்போது தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்கு "ஏராளமான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil