ரஷ்யாவின் சிங்கிள் டோஸ் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு’ இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
ஸ்புட்னிக் லைட் என்பது இந்தியாவில் உள்ள பெரியவர்களுக்கான இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பால், கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு அனுமதியைப் பெற்ற 9வது தடுப்பூசியாகும். "இது தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி’ ரஷ்யாவின் கேமலேயா (Gamaleya) நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இது ஏற்கெனவே இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் இரண்டு-டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசியின் பாகம்-1 போலவே உள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட்டுக்கு’ அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) வழங்குவதற்கு’ தடுப்பூசிகள் தொடர்பான நிபுணர் குழு’ இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு (DCGI) பரிந்துரைத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
ஸ்புட்னிக், சிங்கிள்-ஷாட் தடுப்பூசி டெல்டா மாறுபாட்டின் தொற்றுக்கு எதிராக சுமார் 70 சதவீத செயல்திறனைக் காட்டியது. இது ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக’ ஒரு பூஸ்டர் டோஸாக பயனுள்ளதாக இருக்கும், என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி நிறுவனம் (RDIF) சமீபத்தில் அறிவித்தது.
"கமலேயா மையத்தின் ஆரம்ப ஆய்வில், ஸ்புட்னிக் லைட், செராவை அடிப்படையாகக் கொண்ட ஒமிக்ரானுக்கு எதிரான வைரஸ் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டை கணிசமாக அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் கிரில் டிமிட்ரிவ் ஒரு அறிக்கையில்’ ஸ்புட்னிக் லைட் "ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக உட்பட பிற தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் கால அளவை அதிகரிப்பதற்கான தீர்வு" என்று வலியுறுத்தினார்.
தடுப்பூசி இயக்கத்தில் இந்தியா இதுவரை 12 லட்சம் டோஸ் ஸ்புட்னிக் V-யை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “