பெங்களூரு குண்டு வெடுப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஓப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் அமைந்துள்ளது. கடந்த 1ம் தேதி மதியம் 12.55 மணியளவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக முதல்வர் டி.கே சிவகுமார் சனிக்கிழமை பேசியபோது, இந்த 2022ம் ஆண்டு மங்களூரு, ஷிம்மோகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைபோல இதுவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ மங்களூரில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறது. அந்த வெடி குண்டுகளின் உள் இருந்த பொருள், இதுவும் ஒன்றாக இருக்கிறது. மங்களூரு, ஷிம்மோகாவில் உள்ள காவல்துறையினர் இங்கே வந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். குண்டி வெடிப்பில் ஈடுபட்டதாக சந்திகிக்கப்படும் நபர் அரசுப் பேருந்தில் வந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.மதுரை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றது என்பது குறிப்பிடதக்கது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“