நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருந்து தேவையைக் கருத்தில் கொண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மருந்து தேவையைக் கருத்தில் கொண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்து ரெம்டெசிவரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் மருந்தை அனைவருக்கும் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரெம்டெசிவரின் அனைத்து உள்நாட்டு உற்பத்தியாளர்களும் தங்கள் பங்குதாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விவரங்களை தங்கள் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 63,294 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் பதிவான அதிகபட்ச தொற்று எண்ணிக்கை ஆகும். இதனால், அம்மாநிலத்தில் இதுவரையிலான மொத்த கொரோனா தொற்று எண்ணிகை 34,07,245 ஆக உயர்ந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரை 10,732 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளது. டெல்லியின் நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். மக்கள் அவசியம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் முகக்கவசம் மற்றும் ஹாண்ட் சானிடைஸர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவைக் கட்டுப்படுத்த தனது அரசு விரும்பவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். COVID-19ஐ சமாளிக்க பொதுமுடக்கம் ஒரு தீர்வு அல்ல என்று நான் நம்புகிறேன். மருத்துவமனை அமைப்பு பற்றாக்குறாஇ ஏற்பட்டால் மட்டுமே பொதுமுடக்கம் விதிக்கப்பட வேண்டும்” என்றார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 6,618 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 22 பேர் உயிரிழந்தனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு அளிக்கப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"