Harikishan Sharma
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் புதிய சட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதாக விவசாயிகள் பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமான முடிவை எட்டவில்லை. விவசாயிகள் இந்த மூன்று சட்டங்களையும் மொத்தமாக நீக்க வேண்டும் என்றூ கேட்டுக் கொண்டனர். இரண்டு பக்கமும் மீண்டும் டிசம்பர் 5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளனர்.
40 விவசாயிகள் சங்கங்களின் 7 மணி நேர தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாய சங்க தலைவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர். அரசும் தன்னுடைய பார்வையை முன்வைத்தது என்றார். இந்த கூட்டத்தில் அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய சட்டங்களால் பஞ்சாபில் இருக்கும் மண்டிகள் பலவீனமாகும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். மண்டிகள் பலவீனமாகாது. இது குறித்து அரசு பேச தயாராக உள்ளது. புதிய சட்டங்கள் தனியார் மண்டிகளை உருவாக்க வழி செய்கிறது. ஆனால் தனியார் மண்டிகளுக்கு வரி ஏதும் இல்லை என்பது குறித்து தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசு முடிவெடுக்கும். இரண்டுக்கும் லெவல் ப்ளேயிங் வாய்ப்புகள் இருக்கும் என்பதால் ஒன்று மற்றொன்றை பாதிக்காது என்றார் தோமர்.
மேலும் படிக்க : டெல்லி சலோ : தேசத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டத்தில் இணையும் விவசாயிகள்!
பான் கார்ட் இருந்தால் மட்டுமே போதும். தனியார் மண்டிகளில் வணிகம் செய்யலாம் என்ற பிரிவுக்கும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். அனைத்து விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் திட்டம் எளிமையாகவே இருக்க வேண்டும் என்று தான் இதை நடைமுறைப்படித்தினோம். ஆனால் இன்றைய நாளில் பான் கார்டினை யார் வேண்டுமானாலும் எளிமையாக பெற்றுவிடலாம். எனவே இதற்கு மேலும் சில பாதுகாப்புகள் வேண்டும் என்றும் அவர்கள் கூறியதாக தோமர் கூறினார்.
சர்ச்சைகள் தீர்க்கும் முறை தொடர்பான விதிகள் குறித்தும் பேசப்பட்டது. விவசாயிகள் தங்கள் குறைகளை துணைநிலை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நீதிபதி நீதித்த்துறையில் ஒரு கடைநிலை அதிகாரி என்று விவசாய சங்கங்கள் கருதுகின்றனர். மேலும் விவசாய சங்கங்கள் தங்கள் குறைகளை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல விரும்புவதாக கூறுகின்றனர். இது குறித்தும் அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டத்திற்கு கீழ் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தோமர் உறுதி அளித்துள்ளார்.
சோகைகளை எரித்தலால் தேசிய தலைநகரில் காற்று மாசுபடுதல் தொடர்பாக கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தங்கள் மற்றும் மின்சார (திருத்த) மசோதா 2020 குறித்தும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். தவிர, ஒப்பந்த விவசாயத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் கொடியிட்டனர். இந்த விஷயங்களையும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது என்று தோமர் கூறினார்.
கூட்டத்தின் போது வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகவரால், புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும், வேளாண் துறை விவசாயிகளுக்காக உருவாக்கிய மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் கொரோனா காலத்தில் விநியோகம் பாதிப்படையாமல் இருக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கப்படம் மூலம் கூறினார்.
எவ்வாறாயினும் விவசாய சங்க தலைவர்கள் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். எங்களுக்கு சட்டங்களில் திருத்தம் வேண்டாம். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அசாத் கிசான் சமிதி தலைவர் ஹர்பல் சிங் சங்கா தெரிவித்தார்.
சட்டத்தில் இருக்கும் குறைகளை கூறினோம். அவர்கள் அந்த குறைகளை ஏற்றுக் கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பல்தேவ் சிங் சிர்சா கூறினார். க்ராந்திகரி கிஷான் தலைவர் தர்ஷன் பால், அரசு இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் எங்களுக்கு திருத்தங்கள் வேண்டாம். சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
வேளாண் துறை வெளியிட்ட அறிக்கையில், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த மூன்று சட்டங்களின் கான்ஸ்டியூசனல் வேலிடிட்டி குறித்து கேள்விகள் எழுப்பினார்கள். "இந்த சட்டங்களை மத்திய அரசு சட்டமியற்றும் அரசியலமைப்பு விதிகளை விவசாயிகளுக்கு விளக்கியது” என்று கூறப்பட்டிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தோமர் மற்றும் கோயல் அமித் ஷாவை சந்தித்தனர். அதே போன்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கும் அமித் ஷாவை சந்தித்தார்.
சாதகமான சூழல் ஏற்படுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இன்றி மத்திய அரசு அளித்த மதிய உணவை மறுத்த விவசாயிகள் சிங்கு எல்லையில் போராட்ட களத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரொட்டி, சப்ஜி மற்றும் பருப்பு உணவை உட்கொண்டனர். அரசு வழங்கிய உணவு அல்லது டீயை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. நாங்கள் எங்களின் உணவை கொண்டுவந்துள்ளோம் என்றனர் விவசாயிகள்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மட்டும் அல்லாமல் உ.பி. மற்றும் கர்நாடகாவில் இருந்தும் விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து தரப்பில் இருந்தும் 40 அமைப்புகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். கடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களைக் காட்டிலும் 5 அமைப்புகள் அதிகமாக வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
விக்யன் பவனில் கலந்து கொண்டவர்களில், காசிப்பூர் எல்லையை முற்றுகையிட்ட பாரதிய கிசான் யூனியனின் ராகேஷ் திக்கைத், செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை விவாதிக்க செவ்வாய்க்கிழமை கூட்டத்திற்குப் பிறகு அவர் தனியாக தோமரை சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைப்பதற்கான அரசாங்க முன்மொழிவை நிராகரித்தனர். முன்னதாக, நவம்பர் 13 அன்று, இரு தரப்பினரும் அதிகபட்ச நிலைப்பாடுகளை எடுத்திருந்தனர். அப்போது பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்த ஒப்புக்கொண்டனர். முந்தைய மாதம், விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாய செயலாளருடனான சந்திப்பிலிருந்து வெளியேறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.