scorecardresearch

பதவி ஏற்ற 4 நாள்களில் ஓய்வு: சென்னை, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி

சென்னை, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Centre clears appointment of Justices RD Dhanuka and SV Gangapurwala as Bombay Madras HC CJs
நீதிபதி ரமேஷ் தனுகா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் மற்றும் கங்காபூர்வாலா.

மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி ரமேஷ் டி தனுகாவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மே 27, சனிக்கிழமை பதவி ஏற்றுக்கொள்ளும் மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தனுகா, மே 30 அன்று ஓய்வு பெறுகிறார். அவர் உயர் நீதிமன்றத்தின் தலைவராக மிகக் குறுகிய காலம் பதவி வகிப்பார்.

ஏப்ரல் 19 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி தனுகா மற்றும் நீதிபதி கங்கபூர்வாலா ஆகியோரின் பெயர்களை முதன்மை உயர் நீதிமன்றங்களின் தலைவர்களாகப் பரிந்துரைத்த ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதி டி ராஜா மே 24 அன்று ஓய்வு பெற்றார். நீதிபதி டி ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏப்ரல் 19 அன்று மீண்டும் வலியுறுத்திய போதிலும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

இது மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக தனுகா மற்றும் கங்காபூர்வாலா ஆகியோரை நியமிப்பதில் தடையை ஏற்படுத்தியது.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி தனுகா மற்றும் நீதிபதி கங்கபூர்வாலா ஆகியோர் பதவியேற்ற நாளிலிருந்து அந்தந்த உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி தனுகா, நீதிபதி கங்கபூர்வாலாவுக்குப் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி ஆவார்.

65 நீதிபதிகள், 42 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 23 கூடுதல் நீதிபதிகளுடன் பாம்பே உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 94 ஆகும்.

இந்த நிலையில், நீதிபதி கங்காபூர்வாலா சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டவுடன், உயர் நீதிமன்றத்தின் மொத்த பலம் 64 ஆக இருக்கும். நீதிபதி தனுகா மே 30 அன்று ஓய்வு பெற்ற பிறகு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் மொத்த பலம் 63 ஆக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Centre clears appointment of justices rd dhanuka and sv gangapurwala as bombay madras hc cjs

Best of Express