உச்ச நீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
2022 டிசம்பர் 13ஆம் தேதியன்று, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பங்கஜ் மித்தல் (ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி), நீதிபதி சஞ்சய் கரோல் (பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி), நீதிபதி பிவி சஞ்சய் குமார், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி), நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா (நீதிபதி, பாட்னா உயர் நீதிமன்றம்) மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா (நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம்) ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.
பிப்ரவரி 2 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) நீதிபதி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும், பின்னர் பெயர்கள் நியமனத்திற்காக ராஷ்டிரபதி பவனுக்கு அனுப்பப்பட்டதாகவும் வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.
பணி நியமனத்திற்கான வாரண்டுகள் சனிக்கிழமை (பிப்.4) வெளியிடப்பட்டால், அடுத்த வார தொடக்கத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையில் மேலும் இருவரின் பெயர்களை உச்ச நீதிமன்ற (SC) நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த நியமனம் வந்துள்ளது.
இதற்கிடையில், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரை செய்தது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/