Advertisment

18 பேர் பயங்கரவாதிகள்: மத்திய அரசு பட்டியல்

மத்திய அரசு: எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை சீர்குலைக்க இடைவிடாத முயற்சிகளை எடுத்தவர்கள்

author-image
WebDesk
New Update
18 பேர் பயங்கரவாதிகள்: மத்திய அரசு பட்டியல்

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் (2019) 18 நபர்கள் தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவித்தது.

Advertisment

இவர்கள், பல்வேறு எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டை சீர்குலைக்க இடைவிடாத முயற்சிகளை எடுத்தவர்கள் ஆவார்கள் என்றும், அவர்களின் பெயர்கள் சட்டத்தின் நான்காவது பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1. சஜித் மிர் என்கிற சஜித் மஜித் என்கிற இப்ராகிம் ஷா என்கிற வாசி என்கிற காளி என்கிற முகமது வாசிம் (பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தளபதி மற்றும் 26/11 மும்பை தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய நபர்களில் ஒருவர்)

2. யூசுப் முசம்மில் என்கிற அகமது பாய் என்கிற யூசுப் முசமில் பட் என்கிற ஹுரேய்ரா பாய் (பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் ஜம்மு-காஷ்மீர் நடவடிக்கைகளின் தளபதி மற்றும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி)

3. அப்துர் ரெஹ்மான் மக்கி என்கிற அப்துல் ரெஹ்மான் மக்கி (லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபிஸ் சயீத்தின் மைத்துனர், லஷ்கர் இ தொய்பா அரசியல் விவகாரங்கள் தலைவர் மற்றும் லஷ்கர் இ தொய்பா வெளிநாட்டு உறவுகள் தலைவராக செயல்பட்டவர்)

4. சாகித் மெகமூத் என்கிற சாகித் மெகமூத் ரெஹ்மதுல்லா (லஷ்கர் இ தொய்பாவின் முன்கள அமைப்பான பலாஹ்-இ-இன்சனியத் அமைப்பின் துணைத் தலைவர்)

5. பர்ஹதுல்லா கோரி என்கிற அபு சுபியான் என்கிற சர்தார் சாகாப் என்கிற பரு (அக்ஷர்தாம் (2020) மற்றும் ஹைதரபாத் (2005) தாக்குதல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி)

6. அப்துல் ரௌப் அஸ்கர் என்கிற முப்தி என்கிற முப்தி அஸ்கர் என்கிற சாத் பாபா என்கிற மவுலான முப்தி ரௌப் அஸ்கர் (நாடாளுமன்றத்தின் மீது 2001-இல் நடத்தப்பட்ட தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கியமான நபர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பயிற்சியாளர்)

7. இப்ராகிம் அத்தர் என்கிற அகமது அலி முகமது அலி ஷேக் என்கிற ஜாவித் அம்ஜத் சித்திக் என்கிற ஏ ஏ ஷேக் என்கிற சீப் (1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடையவர் மற்றும் 2001 நாடாளுமன்ற தாக்குதலைத் திட்டமிட்டவர்களில் முக்கியமான நபர்)

8. யுசுப் அசார் என்கிற அசார் யூசுப் என்கிற முகமது சலிம் (1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி)

9. சாகித் லதிப் என்கிற சோட்டா சாகித் பாய் என்கிற நூர் அல் தின் (பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி, ஜெய்ஷே முகமதின் சியால்கோட் தளபதி)

10. சையது முகமது யூசுப் ஷா என்கிற சையத் சலாவுதீன் என்கிற பீர் சாகேப் என்கிற புஜுர்க் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைமை தளபதி)

11. குலாம் நபி கான் என்கிற அமிர் கான் என்கிற சைபுல்லா காலித் என்கிற காலித் சைபுல்லா என்கிற ஜாவாத் என்கிற தாண்ட் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை தலைமை தளபதி)

12. ஜாபர் ஹுசைன் பட் என்கிற குர்ஷித் என்கிற முகமது ஜாபர் கான் என்கிற மவுல்வி என்கிற குர்ஷீத் இப்ராகிம் (ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் துணை தலைமை தளபதி)

13. ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி என்கிற ஷா ரியாஸ் அகமது என்கிற ரியாஸ் பத்கல் என்கிற முகமது ரியாஸ் என்கிற அகமது பாய் என்கிற ரசூல் கான் என்கிற ரோஷன் கான் என்கிற அஜீஸ் (பாகிஸ்தானைச் சேர்ந்த, இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்)

14. முகமது இக்பால் என்கிற ஷபாந்திரி முகமது இக்பால் என்கிற இக்பால் பத்கல் (பாகிஸ்தானைச் சேர்ந்த, இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இணை நிறுவனர், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்)

15. ஷேக் ஷகீல் என்கிற சோட்டா ஷகீல் (தாவூத் இப்ரகாமின் கூட்டாளி)

16. முகமது அனிஸ் ஷேக் (1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி)

17. இப்ராகிம் மேமன் என்கிற டைகர் மேமன் என்கிற முஷ்டாக் என்கிற சிக்கந்தர் என்கிற இப்ராகிம் என்கிற அப்துல் ரசாக் மேமன் என்கிற முஸ்தபா என்கிற இஸ்மாயில் (மும்பை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி)

18. ஜாவேத் சிக்னா என்கிற ஜாவேத் தாவூத் டெய்லர் (1993 மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடையவர், தாவூத் இப்ராகிம் கூட்டாளி, பாகிஸ்தான் தீவிரவாதி)

 

முன்னதாக, சட்ட திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, " பயங்கரவாத செயல்களானவை, அமைப்புகளால் அல்ல, தனிநபர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதால் அதற்கு பின்னால் இருக்கும் தனிநபர்களை தடுக்க முடியாது. தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்காமல் இருப்பது சட்டத்தை மீறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் எளிமையாக மற்றொரு பெயரின் கீழ் ஒன்று கூடி, தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்வார்கள்" என்று தெரிவித்தார்.

1967 வருட சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (அல்லது உபா சட்டம்), எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் வெளியீடுகளை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைதுசெய்ய முடியும்.

2019 திருத்த சட்டத்தின் கீழ், தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. மேலும், பயங்கரவாதத்திலிருந்து கிடைத்த நிதியைக்கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அதிகாரத்தையும் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
India Terrorist Uapa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment