இலவச ஆன்லைன் களஞ்சியம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் விக்கிபீடியாவிற்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. விக்கிப்பீடியாவில் தன்னார்வலர்களாக உள்ளவர்கள் ஆளுமைகள், சிக்கல்கள் அல்லது பல்வேறு தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கவும் திருத்தவும் முடியும்.
விக்கிப்பீடியா ஒருசார்பாகவும் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவின் பக்கங்களை உருவாக்குவதற்கும் அதில் திருத்தம் செய்வதற்கும் ஒரு சிறு குழு பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. மேற்படி அதனுள் தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் கருத்துக்களையும் தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவிட முடியும். காரணம் இது ஒரு இலவச மற்றும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்த கூடிய ஒரு ஆன்லைன் களஞ்சியமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது. இருப்பினும் இதன் உண்மைத் தன்மை குறித்து நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், விக்கிப்பீடியாவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸிலும் "விக்கிப்பீடியா வெளியிடும் தகவல்கள் ஒரு சார்பாகவும், தவறானதாகவும் இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றை பற்றி விக்கிப்பீடியா பக்கத்தில் அவதூறாக தகவல் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் விக்கிப்பீடியாவுக்கு எதிராக அந்த செய்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், செய்தி நிறுவனம் குறித்த பக்கத்தில் திருத்தங்களைச் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்து விக்கிப்பீடியாவிற்கு செப்டம்பர் 5 அன்று அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.
நீதிமன்றத்தின் உத்தரவை விக்கிபீடியா ஏற்கவில்லை என்றால் அது இந்தியாவில் இயங்க வேண்டாம் என்றும், அதைத் தடுக்குமாறும் மத்திய அரசுக்கு வலியுறுத்தும் என்றும் கூறியது.
இந்த மையம் விக்கிபீடியாவுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. அதில் விக்கிப்பீடியா வழங்கிய தகவல்களில் உள்ள சார்பு மற்றும் தவறான தன்மைகள் பற்றிய பல புகார்களைக் குறிப்பிட்டு, விக்கிப்பீடியாவை ஏன் இடைத்தரகர் என்பதற்குப் பதிலாக வெளியீட்டாளராகக் கருதக்கூடாது என்றும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“