Advertisment

சி.ஏ.ஏ-கீழ் 14 பேருக்கு குடியுரிமை வழங்கல்: மத்திய உள்துறை அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான (சி.ஏ.ஏ) விதிகளை அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமை, 14 நபர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Centre issues first set of citizenship certificates under CAA to 14 applicants Tamil News

மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா விண்ணப்பித்தவர்களுக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Central Government | CAA: அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் 2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. சி.ஏ.ஏ மசோதா டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையிலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Centre issues first set of citizenship certificates under CAA to 14 applicants

இதன்பின்னர், சி.ஏ.ஏ மசோதா டிசம்பர் 12, 2019 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்தால், ஐந்து வருடங்கள் அவர்கள் இங்கு தங்கியிருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் 11 அன்று குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான (சி.ஏ.ஏ) விதிகளை அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதன்கிழமை, 14 நபர்களுக்கு சி.ஏ.ஏ-வின் கீழ் முதல் குடியுரிமைச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில், “டெல்லியின் இயக்குநர் (சென்சஸ் ஆபரேஷன்) தலைமையிலான டெல்லி அதிகாரமளித்த குழு, உரிய ஆய்வுக்குப் பிறகு, 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இயக்குனர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை) இந்த விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 இன் அறிவிப்புக்குப் பிறகு முதல் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டன. மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா டெல்லியில் சில விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழை வழங்கினார். மேலும் விண்ணப்பதாரர்களை வாழ்த்தினார் மற்றும் குடியுரிமை (திருத்தம்) விதிகள், 2024 இன் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தினார்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை. 

சி.ஏ.ஏ சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே, நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புகள் வெடித்தன. குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.  எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறி வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Central Government Caa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment