Centre looks to finetuning vaccine strategy: studying single-shot effect to mixing doses : மத்திய அரசு முன்மொழிவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி தடம் அறிதல் தளத்தின் மூலம் தரவுகளை பெற்ற பிறகு, கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இடையேயான கால அளவை நீட்டித்ததால் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளது மத்திய அரசு. இந்த தரவுகள், ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசின் ஆலோசனையில் முடிவெடுக்க உதவும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த புதிய ப்ளாட்ஃபார்ம் ஆகஸ்ட் மாதம் பரிசீலனை செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. ஜனவரி 16ம் தேதி துவங்கி கிட்டத்தட்ட இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் 208.89 மில்லியன் தடுப்பூசிகளில் 90% தடுப்பூசிகள் கோவிஷீல்ட் வகையே. பாரத் பயோட்டெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட அளவு மக்களே அதனை எடுத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க : குழந்தைகளுக்கு அதிகரிக்கும் கொரோனா அபாயம்: தீவிர நடவடிக்கையில் சென்னை
கண்டறியும் தரவு, தடுப்பூசி தரவு மற்றும் ஒட்டுமொத்த நோய் தரவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கும் போது தடுப்பூசியின் செயல்திறன், மறுதொற்று விகிதம் போன்ற முக்கிய விசயங்களை கவனிப்போம் என்று நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி) கீழ் உள்ள கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறினார்.
கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை அறிய வேண்டும் என்ற கோரிக்கை மார்ச் ஏப்ரல் மாத காலங்களில் ஏற்பட்டது என்கிறார் அரோரா. அதற்கு முன்பு தடுப்பூசியின் செயல்திறனை இந்தியா ட்ராக் செய்யவில்லை.
நோய்த்தொற்றுகள் பிறகு தடுப்பூசிகள் நோய்த்தடுப்புக்கு பிந்தைய நோய்த்தொற்றுகளின் தீவிரம் போன்ற அம்சங்களைப் அறிவதே இதன் நோக்கமாகும். “இது நோய்த்தடுப்புக்குப் பிறகு நீங்கள் எவ்வளவு காலம் நோயிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ள உதவும். இது தடுப்பூசிகளின் டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் ஏற்படும் தாக்கத்தையும், அதிகரிப்பதன் மூலமோ அல்லது குறைப்பதன் மூலமோ மாற்றியமைக்க வேண்டிய அம்சம் என்ன உள்ளது என்பதையும் நமக்குத் தெரிவிக்கும். இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு தரவு மதிப்பாய்வு செய்யப்படும் என்று அரோரா கூறினார்.
ஒற்றை டோஸ் முறையின் செயல்திறன் எப்படி இருக்கும் என்பதை அறியவும் இந்த தரவு உதவும் என்று நம்பந்தகுந்த வட்டாரம் அறிவித்துள்ளது. மற்ற வைரஸ் திசையன் தடுப்பூசிகள் ஒற்றை-டோஸ் பதிப்புகளைக் கொண்டுள்ளன, மேலும் இது கோவிஷீல்டிற்கும் பொருந்தும் ஏன் என்றால் இது ஒற்றை டோஸ் தடுப்பூசியாகவே துவங்கப்பட்டது என்ற வாதம் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசியாகும். மேலும் இது வைரல் வெக்டர் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டது. ஸ்புட்னிக் தடுப்பூசியும் இதே தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இரட்டை டோஸ் தடுப்பூசியாகும். செயல்திறன் அறிக்கைகளின் அடிப்படையில் இரண்டு டோஸ் தடுப்பூசியாக அளவீடு செய்யப்படுவதற்கு முன்பு ஒற்றை தடுப்பூசியாகவே அஸ்ட்ரெஜெனாகா தயாரிப்பினை துவங்கியது.
தடுப்பூசி மேலாண்மையில் ஒற்றை டோஸ் தடுப்பூசிகள் மூலம் நாட்டின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். தற்போது பற்றாக்குறையால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. கோவிட் தொற்றுகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் தரவுகளை பெற ஏற்கனவே மத்திய அரசின் செயல்பாட்டில் இருக்கும் தளங்களை பயன்படுத்தும். சோதனை, உறுதி செய்யப்பட்ட நோய் தொற்று ஆகியவற்றின் தரவுகளை கொண்டுள்ள ஆர்.டி.பி.சி.ஆர்., ஆரோக்கிய சேது போன்ற செயலிகளும் இதில் உள்ளடங்கும். தடுப்பூசிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்க, சான்றிதழ்களை பெற உருவாக்கப்பட்ட கோவின் தளமும் இதில் பயன்படுத்தப்படும்.
இந்த தளத்தின் அறிமுகம் எப்போது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை என்றாலும் மிகவிரைவில் இந்த தளம் பயன்பாட்டிற்கு வரும் என்றும், “நாடு முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட தரவை சிறப்பாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். உண்மையான உலகில் கொள்கை மற்றும் தடுப்பூசி செயல்திறனை வழிநடத்த இது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்க்கவும் நாம் தயார் நிலையில் இருக்கிறோம் என்று அவர் கூறினார். புதிய யோசனைகள் வரும்போது, சிந்தனை செயல்முறை கூர்மையாகி, நோயின் முன்னேற்றத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்வதால், இத்தகைய உத்திகள் தெளிவாகி, செயல்முறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன என்று அரோரா கூறினார். இது ஒரு நிரந்தர தளமாக மாற்றுவதற்கான முயற்சியாகும், இது எதிர்காலத்தில் தடுப்பூசிகள் தேவைப்படும் பிற புதிய மற்றும் வளர்ந்து வரும் நோய்களுக்கும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிஷீல்ட் ஆஸ்ட்ரெஜெனகா – ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இந்திய பதிப்பாகும். தற்செயலாக இங்கிலாந்தின் நிலையை காட்டி இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான இடைவெளியை 12 வாரங்களாக அதிகரித்து அறிவித்தது. ஆனால் முழு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் வீரிய இடைவெளியை எட்டு வாரங்களாக குறைக்க இங்கிலாந்து முடிவு செய்தது. ஒரு டோஸை விட இரண்டு அளவுகள் வைரஸின் குறிப்பிட்ட மாறுபாடுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை அளித்தன என்று ஆய்வு முடிவுகள் ஒன்று இங்கிலாந்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil