Advertisment

நெருங்கும் மக்களவை தேர்தல்; சி.ஏ.ஏ சட்டம் அமல்.. மத்திய அரசு அதிரடி

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை (திருத்த) சட்டம் அமலுக்கு வந்தாலும், விதிகள் அறிவிக்கப்படாததால் அதை அமல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில்,

author-image
WebDesk
New Update
Centre notifies CAA rules ahead of Lok Sabha polls schedule announcement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2019 டிசம்பரில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை (மார்ச் 11,2024) அறிவித்தது.

லோக்சபா தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisment

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பதிவில், “குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 ஐ மோடி அரசாங்கம் இன்று அறிவித்தது. இந்த விதிகள் இப்போது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினரை நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும்.

இந்த அறிவிப்பின் மூலம் அந்த நாடுகளில் வாழும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் அளித்த வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி” நிறைவேற்றியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட போதிலும், விதிகள் அறிவிக்கப்படாததால், சி.ஏ.ஏ செயல்படுத்த முடியவில்லை.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவிற்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் அல்ல, ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த முயன்ற குடியுரிமை (திருத்த) மசோதா. டிசம்பர் 9, 2019 அன்று மக்களவையிலும், இரண்டு நாள்களுக்குப் பிறகு ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.

இது டிசம்பர் 12, 2019 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே, நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புகள் ஏற்பட்டன.

சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகள் ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை மற்றும் விதிகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் மீண்டும் மீண்டும் நீட்டிப்புகளை நாடியது.

ஜனவரியில், இந்தியன் எக்ஸ்பிரஸ் CAA விதிகள் தயாராக இருப்பதாகவும், செயல்முறைக்கான ஆன்லைன் போர்ட்டலும் நடைமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், “விண்ணப்பதாரர்கள் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்த ஆவணமும் கேட்கப்படாது. 2014 க்குப் பிறகு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் புதிய விதிகளின்படி மாற்றப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டன.

கடந்த மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் லோக்சபா தேர்தலுக்கு முன் CAA க்கான விதிகள் வெளியிடப்படும் என்றும், பயனாளிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் கூறினார்.

அப்போது, “அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது காங்கிரஸின் வாக்குறுதியாகவும் இருந்தது. பிரிவினை நடந்தபோது-இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள்-அனைவரும் மதத் துன்புறுத்தலுக்குப் பிறகு இந்தியாவுக்கு வர விரும்பினர்.

உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் என்று அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் (காங்கிரஸ்) தலைவர்கள் தங்கள் வார்த்தையில் இருந்து பின்வாங்கினர்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “நமது முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு (சிஏஏவுக்கு எதிராக) தூண்டப்படுகிறார்கள். CAA என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத துன்புறுத்தலுக்குப் பிறகு இந்தியாவுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே. யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Centre notifies CAA rules ahead of Lok Sabha polls schedule announcement

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Amit Shah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment