மோதல்: ஐகோர்ட் நீதிபதியாக 12 பெயர்களை வலியுறுத்திய உச்ச நீதிமன்ற கொலிஜியம்; மத்திய அரசு ஆட்சேபனை

இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், கடந்த வாரம் 12 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 68 விண்ணப்பதாரர்களை பரிந்துரைத்தது. அரசாங்கத்தின் ஆட்சேபனையை மீறி 12 பெயர்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

faceoff, centre objected, supreme court, supreme court collegium, உச்ச நீதிமன்ற நீதிபதி என்வி ரமணா, உச்ச நீதிமன்ற கொலிஜியம், சுப்ரிம் கோர்ட், உயர் நீதிமன்றம், இந்தியா, மத்திய அரசு, 12 names for high coruts, Chief Justice of India NV Ramana

உச்ச நீதிமன்ற கொலீஜியம் 5 உயர் நீதிமன்றங்களுக்கு 3 நீதித்துறை அதிகாரிகள் உட்பட 12 விண்ணப்பதாரர்களை நியமிக்க பரிந்துரைத்து தனது முடிவை மீண்டும் வலியுறுத்தி அரசாங்கத்துடன் புதிய மோதலுக்கு களம் அமைத்துள்ளது.

இந்தியாவின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், கடந்த வாரம் 12 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 68 விண்ணப்பதாரர்களை பரிந்துரைத்தது. அதற்கு, அரசாங்கத்தின் ஆட்சேபனைகளை மீறி 12 பெயர்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. கொலீஜியத்தின் பரிந்துரைகள் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கொலீஜியத்தால் வலியுறுத்தபட்ட செயல்முறைக் குறிப்பின்படி, 12 பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்துவதை முக்கியமானதாக மாற்றுவதற்கு மத்திய அரசு நியமனம் செய்ய கடமைப்பட்டுள்ளது. 12 பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்துவதை குறிப்பிடத்தக்கதாக மாற்றுவதற்கு மத்திய அரசு நியமனம் செய்ய கடமைப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின் கால வரம்பின் முக்கியத்துவத்தை நீதிமன்றம் கோடிட்டுக் காட்டினாலும், மதிய அரசு இந்த பெயர்களை காலவரையின்றி அப்படியே வைத்திருக்கலாம்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு, ஓம் பிரகாஷ் திரிபாதி, உமேஷ் சந்திர சர்மா மற்றும் சையத் வைஸ் மியான் ஆகிய மூன்று நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க கொலிஜியம் தனது பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தியது.

பிப்ரவரி 4 ம் தேதி மற்ற எட்டு நீதித்துறை அதிகாரிகளுடன் இந்த மூவரும் முதலில் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த பட்டியலில் இருந்து ஏழு நீதிபதிகளை மார்ச் மாதம் மத்திய அரசு நியமித்தது.

திரிபாதி, சர்மா மற்றும் மியான் தற்போது முறையே வாரணாசி, எட்டாவா மற்றும் அம்ரோஹாவில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளாக உள்ளனர்.

மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும்கூட வழக்கறிஞர்களில், கொலிஜியம் நான்கு உயர் நீதிமன்றங்களில் இருந்து 9 பெயர்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கறிஞர் ஃபர்சந்த் அலியை நியமிப்பதற்கான முடிவை கொலிஜியம் மீண்டும் வலியுறுத்தியது. அலியின் பெயரை முதன்முதலில் ஜூலை 2019ல் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு, கொலிஜியம் நான்கு வழக்கறிஞர்களான ஜெய்தோஷ் மஜும்தார், அமிதேஷ் பானர்ஜி, ராஜா பாசு சவுத்ரி மற்றும் லபிதா பானர்ஜி ஆகியோரை பரிந்துரைக்கும் முடிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இவர்களின் பெயர்கள் முதன்முதலில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் டிசம்பர் 2018ல் மற்றொரு வழக்கறிஞர் சாக்கியா சென் உடன் பரிந்துரைக்கப்பட்டது. ஐந்து பெயர்களையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றாலும், கொலீஜியம் 4 பெயர்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த 5 நீதிபதிகளும் மேற்கு வங்க அரசால் நியமிக்கப்பட்ட மாநில அரசு வழக்கறிஞர்களாகவும் வாதிடுபவர்களாகவும் நிலைக்குழு ஆலோசகர்களாகவும் இருந்தனர்.

இதில் அமிதேஷ் பானர்ஜி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி யுசி பானர்ஜியின் மகன் ஆவார். அவர் 2006ம் ஆண்டு மத்திய விசாரணைக்கு தலைமை தாங்கினார். அதன் அறிக்கையில், பிப்ரவரி 2002ல் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்தில் கோத்ராவில் தீங்கு விளைவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.

கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஷியாமால் சென்னின் மகன் ஷாக்யா சென் ஆவார்.

ஓய்வுக்குப் பிறகு, அவர் 2004 முதல் 2008 வரை மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த நீதிபதி கவுஷிக் சந்தாவின் பரிந்துரை ஜனவரி, 2019ல் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டது என்பது அரசாங்கத்தால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஜம்மு -காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய மோக்ஷா கஜூரியா காஸ்மி மற்றும் ராகுல் பாரதி ஆக்ய இரண்டு வழக்கறிஞர்களின் பெயர்களையும் கொலிஜியம் வலியுறுத்தியது.

காஸ்மி பெயர் அக்டோபர், 2019ம் ஆண்டில் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. பாரதி பெயர் மார்ச் மாதத்தில் பரிந்துரைக்கப்பட்டது. கஜூரியா-காஸ்மி ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். அவர் 2016ல் கவர்னர் ஆட்சியின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றினார். பின்னர் மெஹபூபா முப்தி தலைமையிலான பிடிபி-பிஜேபி அரசாங்கத்தில் அவரது சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு தொடர்ந்து பணியாற்றினார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு, வழக்கறிஞர்கள் நாகேந்திர ராமச்சந்திர நாயக் மற்றும் ஆதித்யா சோந்தி ஆகியோரை பரிந்துரைப்பதற்கான தனது முடிவை கொலிஜியம் மீண்டும் வலியுறுத்தியது. சோந்தி முன்பு காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Centre objected but supreme court collegium firm on 12 names for high courts

Next Story
தேசவிரோத சக்திகளுடன் இன்போசிஸ் கூட்டணி: ஆர்.எஸ்.எஸ் சார்பு இதழ் பகிரங்க புகார்infosys, anti national forces, infosys with anti national forces, இன்ஃபோசிஸ், தேசவிரோத சக்திகளுடன் இன்ஃபோசிஸ், ஆர் எஸ் எஸ், rss ஆர்எஸ்எஸ் சார்பு இதழ் இன்ஃபோசிஸ் மீது பகிரங்க புகார், alleged infosys, rss linked panchajanya magazine, rss, central govt
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express