நாட்டில் உள்ள ஒவ்வொரு வயதுவந்தோருக்கும் இலவசமாக தடுப்பூசி போட தேவையான மொத்த அளவுகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு நேரடியாக வாங்குவதாக பிரதமர் அறிவித்த ஒரு நாள் கழித்து, இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து 44 கோடி டோஸ் தடுப்பூசிகளை பெற சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஆர்டரை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், தடுப்பூசி பதிவு சிக்கல்களை விரிவாக்குவதால், மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மாநிலங்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன் படி, அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் நேரடி பதிவிற்கான வசதி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசதி தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் கிடைக்கும். குடிமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கான விரிவான நடைமுறை, மாநிலங்களால் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
“கிராமம் மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் தடுப்பூசி மையங்களிலே நேரடிப்பதிவு மற்றும் குழுக்களின் பதிவு மிகவும் முக்கியம். தடுப்பூசி மையங்களில் பெரிய குழுக்களை பதிவு செய்ய நாங்கள் உதவ வேண்டும். தடுப்பூசி முன்பதிவு செய்ய பொதுவான சேவை மையங்கள் மற்றும் அழைப்பு மையங்களும் பயன்படுத்தப்படும், என்று இந்தியாவின் கொரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிலிருந்து 25 கோடி டோஸ் கோவிஷீல்டிற்கும், பாரத் பயோடெக்கிலிருந்து 19 கோடி டோஸ் கோவாக்சினுக்கும் சுகாதார அமைச்சகம் ஆர்டர் அளித்துள்ளது என்றும், இரண்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் பால் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தடுப்பூசி விநியோகத்தை அதிகரிப்பதற்கான வரைபடத்தை விவரித்த டாக்டர் பால், ஆகஸ்ட் முதல் இந்தியா 74 கோடி கூடுதல் அளவுகளைக் கொண்டிருக்கும், இதில் 30 கோடி அளவுகள் பயாலாஜிக்கல் ஈ மூலம் கிடைக்கும்.
"ஜூலை வரை, எங்களுக்கு 53.6 கோடி அளவுகள் உள்ளன; இந்த ஆர்டர்கள் முன்பே வைக்கப்பட்டவை (தடுப்பூசியின் வெவ்வேறு கட்டங்களில்). தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதற்காக, மேலும் 74 கோடி அளவுகள் சேமிக்கப்பட்டுள்ளன, ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் பற்றாக்குறையை நாங்கள் காணவில்லை. ” என்று டாக்டர் பால் கூறினார்.
"உண்மையில், தடுப்பூசி அளவுகள் கிடைப்பதற்கேற்ப எங்கள் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இதற்கான திட்டம் தெளிவாக உள்ளது. இந்த அளவுகள் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்பட உள்ளன… மற்ற ஆர்டர்களும் கிடைக்கப்படலாம். தடுப்பூசி செலுத்த நேர அட்டவணை தயார், எனவே, சாலை வரைபடம் மற்றும் தடுப்பூசி அளவுகள் கிடைக்கும் அட்டவணையை வழங்குமாறு அவர்களிடம் (உற்பத்தியாளர்களிடம்) கூறியுள்ளோம், ”என்றார்.
மத்திய அரசால் தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்வது தொடர்பான முடிவு உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் அடிப்படையில் அமைந்ததா என்று கேட்டதற்கு, “உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய வழிகாட்டுதலையும் அக்கறையையும் நாங்கள் மதிக்கிறோம். எவ்வாறாயினும், பரவலாக்கப்பட்ட கொள்முதல், மற்றும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை இந்திய அரசு மதிப்பீடு செய்து வந்தது; வெவ்வேறு குழுக்கள் இதிலுள்ள சிரமங்களைக் கண்காணித்தன. ஒரு பொது விவரிப்பு இருந்தது, அதோடு நாங்கள் இணைந்திருந்தோம். பகுப்பாய்வு, பின்னூட்டம், அனுபவம் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடனான ஆலோசனையின் அடிப்படையில் இத்தகைய முடிவுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எடுக்கப்படுகின்றன… இது படத்தில் தெளிவாக உள்ளது, நிச்சயமாக, பொது விவரிப்பும் மிக முக்கியமானது. ” என்று டாக்டர் பவுல் கூறினார்.
12 மாநிலங்கள் குறிப்பாக மையப்படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் தடுப்பூசி திட்டத்தை ஒரு ஒருங்கிணைந்த வழியில் செயல்படுத்துமாறு கோரியுள்ளன. அவை மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள்.
கோரிக்கையின் அடிப்படையில், மே 15 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் மதிப்புரைகள் மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. “மதிப்பாய்வின் அடிப்படையில், இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் சுகாதார அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். ”என்று டாக்டர் பால் கூறினார்.
"பிரதமரின் வழிகாட்டுதலுக்குப் பிறகு, குழுக்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றன, மாநிலங்களுடன் ஒரு முறையான வழியில் பேசின. உலகெங்கிலும் உள்ள நடைமுறைகளையும் நாங்கள் பார்த்தோம். குழுக்கள் மாநிலங்களின் தடுப்பூசி கொள்முதலில் உள்ள சிரமங்களை புரிந்து கொள்ள முயற்சித்தன. இதன் அடிப்படையில், நாங்கள் மீண்டும் மையப்படுத்தப்பட்ட கொள்முதல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ”
ஜூன் 21 முதல் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதை மத்திய எடுத்துக் கொள்ளும்போது, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்கள் தடுப்பூசிக்கு முன்னுரிமை பெறுவார்கள் என்று டாக்டர் பால் கூறினார்.
"சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்ந்து அதிக முன்னுரிமையைப் பெறும்; குறிப்பாக, அவர்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி அதிக முன்னுரிமையை பெறும். 45 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை என்பது தெளிவாக உள்ளது. இந்த வயதினரிடையே அதிகப்படியான இறப்பு ஏற்படுகிறது என்பதை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம், இந்த குழுவின் நோய்த்தடுப்பு மருந்துகளை நாங்கள் கவனித்தால், இறப்பை மிகப் பெரிய அளவில் குறைக்க முடிகிறது, இது 80 சதவீதத்திற்கும் அதிகமாகும். இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய குடிமக்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னுரிமையை தீர்மானிக்க மாநிலத்திற்கு நெகிழ்வுத்தன்மை இருக்கும், "என்று டாக்டர் பால் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.