மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை 0% முதல் 20% வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) சோயாபீன் கொள்முதலை அனுமதித்த சில நாட்களுக்குப் பிறகு, சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசி மீதான ஏற்றுமதி தடைகளை நீக்குவது உட்பட - சமீபத்திய விவசாய கொள்கை முடிவுகளை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இது விவசாயிகளுக்கு "மிகவும் பயனளிக்கும்" என்று கூறினார்.
“வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை குறைப்பதாக இருந்தாலும் சரி அல்லது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பல முடிவுகள் நமது உணவு உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். இவை அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்” என்று பிரதமர் கூறினார்.
மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை 0% முதல் 20% வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது" . மேலும் பிற வரிகளையும் சேர்த்தால் மொத்தம் 27.5% இருக்கும் என்று சௌஹான் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Centre raises import duty on edible oils
சமையல் எண்ணெய்க்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் சோயாபீன் குறைந்த பட்ச ஆதார விலையில் சேர்க்கப்பட்ட நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் சோயாபீன் குறைந்த விலையில் கொள்முதல் செய்ய அரசாங்கம் அனுமதித்தது. சோயாபீன் உற்பத்தியில் நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“