அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜய புரம் என மாற்ற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Centre renames Port Blair as Sri Vijaya Puram to ‘shed colonial imprints’
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது. நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் நமது மூவர்ணக்கொடியின் முதல் வெளிக்கொணர்வை நடத்திய இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களும் சுதந்திர தேசத்துக்காகப் போராடிய செல்லுலார் சிறையும் இதுவே." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“