கடந்த 47 நாட்களில் முதல் முறையாக , கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக குணமடைபவர்களை விட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
Advertisment
இதற்கிடையே, கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களை அனுப்ப மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த 3 மாநிலங்களில், சமீபத்திய நாட்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 43,493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
முன்னதாக, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களை மத்திய அரசு அனுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
மூன்று நபர் அடங்கிய குழுக்கள் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கட்டுப்பாடு, கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு மற்றும் திறன்மிகு மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் மேற்கண்ட மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில், கொரோனோ நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் தற்போது எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து 5 சதவிகிதத்திற்கும் குறைவாக 4.85 சதவீதமாக உள்ளது.
கண்டறியப்படாத, விடுபட்ட கொவிட் நோயாளிகளைக் கண்டறிய கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும், மத்திய அரசு முன்னதாக அறிவுறுத்தியது.
அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் திங்கள் காலை வரை "முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பால், மருந்துக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. வரும், திங்கள் முதல் காலவரையின்றி இரவு நேர ஊரடங்கு அங்கு அமலாகிறது
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முதல் 8 மாவட்ட தலைமையகங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. மாநில தலைநகர் ஜெய்பூர், ஜோத்பூர், பைக்னர், உதய்பூர், ஆஜ்மீர், அல்வார், பில்வாரா ஆகிய நகரங்களில் உள்ள சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்தது.