Advertisment

பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத முன்னாள் தலைமை செயலாளர்; ஓய்வூதியத்தை நிறுத்த நடவடிக்கை

யாஸ் புயலின் சேதத்தை மதிப்பிட மேற்கு வங்கம் சென்ற மோடி, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போதைய மே.வ. தலைமை செயலாளார் ஆலபன் அந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத முன்னாள் தலைமை செயலாளர்; ஓய்வூதியத்தை நிறுத்த நடவடிக்கை

West Bengal ex-chief secretary Alapan Bandyopadhyay : ஓய்வு பெற்று மூன்று வாரங்கள் ஆன நிலையில், மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆலபன் பண்டியோபாத்யாய்க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. இதனால் அவர் இப்போது தனது ஓய்வூதிய சலுகைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழக்க நேரிடும்.

Advertisment

மேற்கு வங்க கேடரின் 1987ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் ஓய்வு பெற்ற பிறகு, மேற்கு வங்க முதல்வர் மமதாவிற்கு ஆலோசனை வழங்க சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 16ம் தேதி அன்று, பணியாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி), ஆலபனுக்கு குற்றச்சாட்டுகளை கூறி ஒரு மெமோ ஒன்றை அனுப்பி, 30 நாட்களுக்குள் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் பெரிய அபராத நடவடிக்கைகள் குறித்து அவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது, இது ஓய்வூதியம் அல்லது கிராஜூவிட்டியை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கிறது என்றும் அமைச்சரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அகில இந்திய சேவைகள் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969இன் விதி 8-இன் கீழ் மற்றும் அகில இந்திய சேவைக (இறப்பு-ஓய்வூதிய நன்மைகள்) விதிகள், 1958-ன் கீழ் விதி 6-ன் கீழ் அவருக்கு எதிராக பெரிய அபராதம் விதிக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்று மெமோராண்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள முறைகேடுகள் அல்லது தவறான நடத்தைகள் தொடர்பான விவரங்கள் குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவருக்கு அனுப்பிய நோட்டீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார் … அவரது பாதுகாப்புக்கான எழுத்துப்பூர்வ அறிக்கை மற்றும் அவர் நேரில் கேட்க விரும்புகிறாரா என்பதையும் குறிப்பிடுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த மெமோவில் மேலும் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்பதையும் குறிப்பிட்டு பதில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவருடைய சேவையின் இறுதி நாட்களில், நரேந்திர மோடி, யாஸ் புயலின் சேதாரங்களை மதிப்பீடு செய்ய மேற்கு வங்கம் வந்த நிலையில், மறுசீராய்வு கூட்டம் ஒன்று மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஆலபனுக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஆஜராகவில்லை. மத்திய உள்த்துறை அமைச்சகம் ஆலபனுக்கு, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஷோ காஸ் (Show Cause) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பிரதம மந்திரி தலைமையிலான கூட்டத்தில் இருந்து விலகியதற்காக, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமைச் செயலாளர் மத்திய அரசாங்கத்தின் சட்டபூர்வமான வழிமுறைகளுக்கு இணங்க மறுப்பதற்கு சமமான வகையில் செயல்பட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு பண்டியோபாத்யாய் பதிலளித்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி தனது ஓய்வூதிய பலன்களை பெற மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் நிவாரணம் தேடுவது வழக்கமல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நீண்ட சட்ட போராட்டம் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒரு அதிகாரி கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவு தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், பாஜகவும் மத்திய அரசும் மனிதமற்றவர்கள் என்பதையே இது நிரூபிக்கிறது. அவர்களுக்கு வேலை ஆக வேண்டும் என்றால் பயத்தையே நிறுவுகிறார்கள் என்று கூறினார். டெல்லியின் இந்த முரட்டுத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நூறு சதவீதம் தவறானது. நாங்கள் இதனை எதிர்த்து போரிடுவோம் என்று சி.பி.ஐ.எம். தலைவர் சுஜன் சக்கரவர்த்தி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment