12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.