Advertisment

ஒமிக்ரான் ஆதிக்கம்: தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு பயணம்

கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் , படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்ஸிஜன் போன்று ஏற்கனவே மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

author-image
WebDesk
New Update
high Omicron cases low vaccination

High Omicron cases low vaccination : கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாநிலங்கள் அல்லது குறைவான தடுப்பூசி செலுத்தும் விகிதம் 10 கொண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisment

நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் படி கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழகம், மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இந்த குழு செல்ல உள்ளது. பஞ்சாப் மற்று உ.பி. மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் தேர்தல்களை ஒத்திவைத்தல் தொடர்பாக ஆலோசிக்கவும் என்று பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் வேகம் பெற்று வருகின்றன.

மத்திய நிபுணர்கள் குழு ஐந்து நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த நாட்களில் மாநில அரசு சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து சோதனை, சர்வைலன்ஸ் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் , படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்ஸிஜன் போன்று ஏற்கனவே மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த குழுக்களின் சரிபார்ப்பு பட்டியலில், ஒமிக்ரான் வழக்குகளை உறுதி செய்யும் மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வும் இடம் பெறும். மாநில அளவிலான மத்திய குழுக்கள் நிலைமையை மதிப்பிட்டு, தீர்வுகளை பரிந்துரை செய்யும். என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தினமும் மாலை 7 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா (26,265), மகாராஷ்டிரா (12,108), வங்காளம் (7,466), கர்நாடகா (7,280) மற்றும் தமிழ்நாடு (6,798) ஆகிய 5 மாநிலங்களில் வழக்குகள் மிகவும் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் மிகவும் குறைவான வழக்குகளை பீகார் (79), ஜார்கண்ட் (273) பதிவு செய்துள்ளது. இருந்தாலும் குறைவான தடுப்பூசி விகிதங்களை கொண்டிருப்பதால் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் இந்த மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

மகாராஷ்ட்ராவில் 108 நபர்களுக்கும், கர்நாடகாவில் 31 நபர்களுக்கும், கேரளத்தில் 37 நபர்களுக்கும், தமிழகத்தில் 34 நபர்களுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் உ.பியில் முறையே 3 மற்றும் 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment