செஸ்னா விமானம் விபத்து: தலைமை பயிற்சியாளர், தமிழக பயிற்சி விமானி பலி

ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தலைமை பைலட் பயிற்சியாளரும் ஒரு பயிற்சி விமானியும் பலியானார்கள்.

By: June 8, 2020, 9:04:23 PM

ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தலைமை பைலட் பயிற்சியாளரும் ஒரு பயிற்சி விமானியும் பலியானார்கள்.

ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தலைமை பைலட் பயிற்சியாளர் ஒருவர்ம் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி ஒருவரும் பலியானார்கள்.

செஸ்னா எஃப்ஏ -152 விடி-இஎன்எஃப் பயிற்சியாளர் விமானம் கங்கடஹடா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பிரசாலா வான்வழிப் பாதையில் இருந்து புறப்பட்ட உடனேயே கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.


படுகாயமடைந்த தலைமை பயிற்சியாளர் பைலட் சஞ்சிப் குமார் ஜா மற்றும் பயிற்சி விமானி அனிஷ் பாத்திமா இருவரும் காமக்ஷநகர் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்ததாக அறிவித்தனர்.

இந்த விமான விபத்தில் உயிரிழந்த பயிற்சி விமானி அனிஷ் ஃபாத்திமா தமிழகத்தைச் சேர்ந்தவர். தலைமை பைலட் பயிற்சியாளர் சஞ்சிப் பீகாரைச் சேர்ந்தவர்.

இந்த விமான தளம் ரூ.9 கோடி மதிப்பில் 50 ஏக்கர் நிலத்தில் விமானிகளின் பயிற்சிக்காக கடந்த ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த விமான தளம் 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தாலும், பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு இந்த விமான தளம் மீண்டும் தொடங்கியது. பயிற்சி விமான தளத்தில் இதுபோல் விபத்து நடைபெறுவது இதுவே முதல் என்று கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான செஸ்னா எஃப்ஏ -152 விடி-இஎன்எஃப் ஒரு கேட்டி ரன் விமானமாகும். முதற்கட்ட விசாரணையில் இந்த விமானம் வான்வழிப் பாதையில் இருந்து புறப்பட்ட உடனேயே எதிர்பாராத விதமாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. கோளாறுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காமாக்‌ஷியாநகர் துணை கலெக்டர் பிஷ்ணு பிரசாத் ஆச்சார்யா ஊடகங்களிடம் கூறினார்.

இந்த விமான விபத்து சம்பவம் குறித்து விசாரிக்க இந்திய விமானப்படை மூத்த அதிகாரிகள் அங்கே வந்தனர். இந்த விமான தளத்தில் இதுவரை 36 பயிற்சி விமானிகள் உட்பட 90 விமானிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Cessna aircraft crashes in odisha chief trainer pilot and tamil nadu trainee pilot killed

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X