ஐசிஐசிஐ சி.இ.ஒ சந்தா கோச்சார் பதவி விலகல். புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் எம்.டியாக பதவி உயர்வு பெறுகிறார் சந்தீப் பக்ஷி. இந்த பதவியில் அவர் அக்டோபர் 3, 2023 வரை நீடிப்பார் என்று ஐசிஐசிஐ நிர்வாகம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய வருமானத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் நிர்வாக தெரிவித்திருக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சந்தா கோச்சார் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
வீடியோகான் நிறுவனத்திற்கு சந்தா கோச்சார் அளித்த கடன் குறித்த விசாரணை தொடர்பாக கோச்சார் விடுப்பில் இருக்கிறார். மார்ச் 29ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் வீடியோகான் க்ரூப் ப்ரோமோட்டர் வேணுகோபால் தூத் மற்றும் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் இணைந்து நடத்த இருந்த NuPower Renewables Pvt Ltd (NRPL) நிறுவனத்திற்கு 3250 கோடி ரூபாய் கடன் அளித்தது ஐசிஐசிஐ வங்கி. 2012ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த கடன் தொகையில் மொத்தம் 86% கடன் திருப்பி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 2017ம் ஆண்டு வீடியோகான் நிறுவனம் என்.பி.ஏவை அறிவித்தது.
விசாரணையில் மாற்றம் இருக்காது
மும்பையில் வாங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஃப்ளாட் பற்றி ஏற்கனவே வருமான வரித்துறையின் சந்தா கோச்சாரிடம் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மும்பை பங்கு வர்த்தக தலைமையகத்தில் ஐசிஐசிஐ நிர்வாகம், சந்தா கோச்சாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக இன்று அறிவித்தது.
மேலும் அவரின் பதவிக்கு சந்தீப் பக்ஷி பொறுப்பேற்கிறார் என்றும் அறிவித்தது. மேலும் போர்ட் ஆஃப் டிரைக்டர்ஸிலிருந்தும் கோச்சார் நீக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த ராஜினாமா எக்காரணம் கொண்டும் கோச்சாரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைக்கு பங்கம் விளைவிக்காது என்று தெரிவித்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம்.
கோச்சார் கடந்து வந்த பாதை
இந்தியாவில் இயங்கி வரும் ரீடெய்ல் வங்கிகளின் இயங்கங்கள் மற்றும் அமைப்புகளை மாற்றி மீள் உருவாக்கம் செய்தவர் சந்தா கோச்சார். 2006-07ம் ஆண்டு இந்த வங்கியின் கார்பரேட் மற்றும் சர்வதேச வர்த்தகங்களை மேற்பார்வையிட்டு வந்தார். 2009ம் ஆண்டிற்குள் ஜாய்ண்ட் மேனேஜிங் டிரைக்ட்ராகவும் முதன்மை நிதி நிர்வாகியாகவும் உதவி அடைந்தார். 2009ம் ஆண்டு அவர் ஐசிஐசிஐ வங்கியின் சி.இ.ஓவாக பதவி ஏற்றார்.