காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
இவர், கடந்த (ஆக.2023) 10-ஆம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனது தொகுதி பொதுமக்கள் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இவர் துறை செயல்பாடுகள் சரியில்லை என கூறி முதலமைச்சர் இவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்ததை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு அதற்கான உத்தரவு கடித்தை கடந்த 22ஆம் உள்துறை அமைச்சகம் வெளியிட, புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
அதனையொட்டி, சட்டசபையில் சந்திரபிரியங்கா அலுவலகத்தில் பயன்படுத்திய பொருள்கள் அக்.23ஆம் தேதி காலி செய்யப்பட்டன.
தொடர்ந்து, அந்த அறைக்கு சட்டசபை செயலகம் மூலம் சீல் வைக்கப்பட்டது. மேலும் அறைக்கு வெளியே இருந்த சந்திர பிரியங்காவின் அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது.
அறைக்கு வெளியே பூட்டில் சட்டசபை செயலர் தயாளன் என கையெழுத்திடப்பட்ட சீல் ஒட்டப்பட்டு இருந்தது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“