சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே உடல் நலக் குறைவு காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் பெற்ற நிலையில், நவம்பர் 29-ம் தேதி முதல் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Chandrababu Naidu granted regular bail by Andhra Pradesh High Court in skill development case
திறன் மேம்பாட்டுக் கழகம் தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
அக்டோபர் 31-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
73 வயதான சந்திரபாபு நாயுடு, 20014 முதல் 2019 வரை தனது தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின்போது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் செய்ததாகக் கூறி ஆந்திரப் பிரதேச சி.ஐ.டி போலீசாரல் செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ரூ. 371 கோடி அரசு நிதியை ஷெல் நிறுவனங்களுக்கு மாற்றியது தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு முதன்மை குற்றவாளி என்று சி.ஐ.டி குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் டிசம்பர் 9, 2021-ல் பதிவு செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு நந்தியாலில் சுற்றுப்பயணம் செய்தபோது கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்றம், அவருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யுமாறும், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின்படி முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நவம்பர் 280-ம் தேதி சரணடையுமாறும் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தில் தற்போது அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்குவதால், அவர் நவம்பர் 28-ம் தேதி அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டியதில்லை.
சந்திர பாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசியல் செயல்பாடுகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்றும் நவம்பர் 29 முதல் அவர் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.