நிலவில் தண்ணீர் இருக்கு ; அது எப்படி அங்கே வந்தது - விடை சொல்லும் சந்திரயான் -2
Chandrayaan 2 : நிலவில் தண்ணீர் உள்ளது என்று உலகத்திற்கு முதன்முதலில் உணர்த்தியது இந்தியாவின் இஸ்ரோவால் 2008ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் தான்.
Chandrayaan 2 : நிலவில் தண்ணீர் உள்ளது என்று உலகத்திற்கு முதன்முதலில் உணர்த்தியது இந்தியாவின் இஸ்ரோவால் 2008ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் தான்.
நிலவில் தண்ணீர் உள்ளது என்று உலகத்திற்கு முதன்முதலில் உணர்த்தியது இந்தியாவின் இஸ்ரோவால் 2008ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் தான். சந்திரயான் 1 விண்கலகத்தில் பொருத்தப்பட்டிருந்த லேண்டர் மற்றும் ரோவரே, இந்த அரிய உண்மையை உலகிற்கு உணர்த்தியது. இதன்மூலம், நிலா குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளை பின்தள்ளி, இந்தியா முன்னணியில் உள்ளது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.நிலவில் தண்ணீர் உள்ளது என்பது கண்டுபிடித்தாகிவிட்டது. எவ்வளவு தண்ணீர் உள்ளது, அது எந்த வடிவத்தில் உள்ளது என்பதையெல்லாம் அறுதியிட்டு இதுவரை கூற இயலவில்லை.
நிலாவில் தண்ணீர் உருவான விதம்
நிலவில் தண்ணீர் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது எந்த நிலையில் உள்ளது ஹைட்ரஜன் மூலக்கூறுகளாக உள்ளதா அல்லது தண்ணீராகவே உள்ளதா அல்லது ஹைட்ராக்சில் அயனிகளாக உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதற்கான விடை, சந்திரயான் 2 விண்கலத்தின் உதவியால் தெரிய உள்ளது.
Advertisment
Advertisements
நிலவில் எவ்வாறு தண்ணீர் உருவாகியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் உள்ளனர். ஏனெனில், நிலவின் பரப்பு முழுவதும் பல்வேறு தனிமங்களின் ஆக்சைடுகளாலேயே சூழப்பட்டுள்ளது. இந்த ஆக்சைடுகள், சூரியக்காற்றில் உள்ள ஹைட்ரஜன் உடன் வினைபுரிந்து ஹைட்ராக்சில் மூலக்கூறுகளாக மாறி பின் மீண்டும் ஹைட்ரஜன் அணுக்கள் உடன் சேர்ந்து நீராக உருவானதாக ஒருதரப்பு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவில் உள்ள தண்ணீர், வெளிப்புறத்திலிருந்து வந்தது. வால்நட்சத்திரங்கள் மற்றும் எரிகற்கள் நிலவின் பரப்பில் மோதும்போது ஏற்பட்ட நீர்த்திவலைகள் ஒன்றிணைந்து இந்த நீர் உருவானதாக மற்றொரு சாரார் தெரிவித்துள்ளனர். விண்வெளி வீரர்கள் நிலாவின் பரப்பில் விட்டுச்சென்ற தண்ணீரே இது என்று ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென்பகுதியில், இஸ்ரோவால் அனுப்பப்பட்டு வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியை நோக்கி முன்னேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. அங்கு ஆய்வு மேற்கொண்டு, நிலவில் தண்ணீர் உருவான விதம் குறித்த பல்வேறு தரப்பினரின் கேள்விகள் மற்றும் யூகங்களுக்கு தக்கவிடை அளிக்கப்போகிறது.
இந்த அரும்பெரும்சாதனை நிகழ்த்த இருக்கும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சந்திரயான் 2 நிகழ்வை, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.