Advertisment

ஆக.23- ‘தேசிய விண்வெளி தினம்’ ; சந்திரயான் 3 தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ : மோடி அறிவிப்பு

நிலவில் சந்திரயான்- 3 விண்கலம் தரையிறங்கிய இடம் சிவ சக்தி என்று அழைப்போம் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Narendra Modi

PM Narendra Modi, during his visit to ISRO, presented the Vikram Lander prototype, the first photo captured by Chandrayaan-3 spacecraft to ISRO Chairman S Somnath. (Express Photo)

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாள் ஆகஸ்ட் 23 -ம் தேதி 'தேசிய விண்வெளி தினம்' என்றும், சந்திர மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ பாயிண்ட் என்று அழைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்தார்.

Advertisment

கிரீஸ் நாட்டில் இருந்து இன்று இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேராக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் & கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கண்ட்ரோல் வளாகத்திற்குச் சென்றார். அங்கு சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தியது குறித்து விளக்கினார்.

தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இப்போது நிலவில். நமது தேசிய பெருமை நிலவில் வைக்கப்பட்டுள்ளது. 2019-ல் சந்திரனின் மேற்பரப்பில் சந்திரயான் -2 அதன் கால்தடங்களை விட்டுச் சென்ற இடத்திற்கு 'திரங்கா' பாயிண்ட் எனப் பெயரிட்டார். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு என்பதை அந்த இடம் என்றென்றும் நினைவூட்டும் என்று மோடி கூறினார்.

அமைதியற்றவனாக இருந்தேன்

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தித்தின் வெற்றி என்றும் மீண்டும் கூறினார். “இது சாதாரண சாதனையல்ல; இது எல்லையற்ற பிரபஞ்சத்தில் இந்தியாவின் அறிவியல் சாதனைக்கான ஒரு கர்ஜனை அறிவிப்பு… இந்தியர்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அறிவியலில் நம்பிக்கை கொண்ட மக்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று, நான் வித்தியாசமான மகிழ்ச்சியை உணர்கிறேன்… இது போன்ற சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதானவை… நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தேன்… நான் மிகவும் அமைதியற்றவனாக இருந்தேன்… ஆனால் என் மனம் உங்களுடன் இருந்தது" என்று கூறினார்.

இன்று காலை 6.30 மணியளவில் பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்திற்கு வந்த போது பிரதமர் மோடி கூறுகையில், நான் வெகு தொலைவில் வெளிநாட்டில் இருந்ததால், இந்தியா திரும்பியதும் முதலில் பெங்களூரு சென்று விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக முடிவு செய்தேன். தற்போது வந்துள்ளோன்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Narendra Modi Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment