சந்திரயான் தொடர் திட்டம் 2008 ஆம் ஆண்டு முதல், அதன் பயணத்தைத் தொடங்கியதில் இருந்து தமிழகத்துடனும் அதன் மக்களுடனும் ஒரு தனித்துவமான தொடர்பைக் கொண்டுள்ளது.
சந்திரயான் 1, 2 மற்றும் 3 பயணங்கள் தமிழர்களால் இயக்கப்பட்டன. மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 ஐ இயக்கினார்.
அதைத் தொடர்ந்து எம் வனிதா சந்திரயான் 2 ஐ மேற்பார்வை செய்தார். இப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த பி வீரமுத்துவேல், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை சந்திரனை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்ட மூன்றாவது பயணத்திற்கு தலைமை தாங்குகிறார்.
சந்திரயான்-3 திட்ட இயக்குனராக உள்ள வீரமுத்துவேல் (46) விழுப்புரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து முடித்து, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்தவர் ஆவார்.
பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1989ல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார். சந்திரயான்-2 திட்ட இயக்குநராக இருந்த வனிதாவுக்குப் பிறகு வீரமுத்துவேல் பதவியேற்றார். அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த கே சிவன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே சிவன், குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆவார். 1980 ஆம் ஆண்டு எம்ஐடியில் தனது வானூர்திப் பொறியியலை முடித்தார். பின்னர், 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் ராக்கெட் திட்டத்தை முன்னின்று நடத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“