கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூல் நகரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக காபூலில் இருந்து இந்திய விமானம் புறப்படுவது தாமதமானது. ஒருவழியாக 350 பேர்களுடன் 2 இந்திய விமானங்கள் சனிக்கிழமை அங்கிருந்து புறப்பட்டது. இந்த விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்தியாவில் தரையிறங்கியது.
காபூல் விமான நிலையத்தில் தளவாட சிக்கல்கள் காரணமாக விமானம் புறப்படுவது தாமதமானது என்று வட்டாரங்கள் தெரிவித்தன - காபூல் விமான நிலையம் இன்னும் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே தலிபான்கள் விமான நிலையத்துக்குள் நுழையும் நிலைகளை கட்டுப்படுத்துவதால் குழப்பம் நிலவுகிறது.
IAF C-17 விமானம் மூலம் இயக்கப்படும் முதல் 2 விமானங்கள், சுமார் 200 பேரை கடந்த திங்கள்கிழமை 40-க்கும் மேற்பட்டவர்களையும், செவ்வாய்க்கிழமை இந்திய தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சிக்கித் தவித்த சில இந்தியப் பிரஜைகள் உட்பட சுமார் 150 பேரை பாதுகாப்பாக வெளியேற்றி மீட்டது. இந்தப் பணிகள் அமெரிக்க ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற, இரண்டு காலி விமானங்களை அனுப்பி காபூலில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் சிறப்பு அலுவலகத்துடன் தங்கள் விவரங்களை அவசரமாகப் பகிர்ந்து கொள்ளுமாறு அங்கே இருக்கும் இந்தியர்கள் மற்றும் அவர்களது முதலாளிகளுக்கு வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 400 பேர் இருக்கலாம் என்று தோராயமாக மதிப்பிடப்படுகிறது. அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான வழிகளை இந்தியா தேடுகிறது.
நகரத்தை விட்டு வெளியேறுவதற்கான போராட்டத்திற்கு மத்தியில், தோஹாவில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்த தலிபானின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர், ஒரு ஆட்சிக் குழு அல்லது அரசாங்கத்தின் வரையறைகளைப் பற்றி மற்ற தலைவர்களுடன் பேசுவதற்கு சனிக்கிழமை காபுல் சென்றடைந்தார்.
காபூலில் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள், தலிபான்கள் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான ஆகஸ்ட் 31ம் தேதி வரையிலான காலக்கெடு முடிவடையும் வரை தங்கள் அரசாங்கம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஆஃப்கானிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான அப்துல்லா அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “அவரும் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயும் காபூலுக்கான தலிபானின் ஆளுநரைச் சந்தித்ததாகவும் அவர் நகர மக்களின் பாதுகாப்பிற்காக எல்லாவற்றையும் செய்வார் என்று உறுதியளித்தார்” என்றும் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க தூதரகம் சனிக்கிழமையன்று அந்நாட்டு மக்களுக்கு விடுத்த புதிய பாதுகாப்பு எச்சரிக்கையில், “அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் யாரும் காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியது.
விமான நிலையத்தில் குழப்பம் மற்றும் தலிபான் சோதனைச் சாவடிகள் அதிகார சவால்கள் காரணமாக வெளியேறும் விமானங்கள் முழுவதுமாக தொலைவில் இருந்தாலும், வெளியேற்ற விமானங்கள் தொடர்ந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.