தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பாஞ்சாப் முதல்வராக தேர்வு

பஞ்சாப் மாநிலம் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னியை ஞாயிற்றுக்கிழமை தனது முதல் தலித் முதல்வராக தேர்வு செய்துள்ளது.

Charanjit singh channi punjab chief minister, Charanjit Singh Channi, பஞ்சாப், பஞ்சாப் முதல்வர், பஞ்சாப்பின் அடுத்த முதல்வர், பஞ்சாப்பின் அடுத்த தலித் முதல்வர், சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப்பின் அடுத்த முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ், Punjab, Punjab next CM Charanji Singh Channi, Punjab next CM, congress, Punjab first Dalit CM, Punjab next cm, congress

பஞ்சாப் மாநிலம் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னியை ஞாயிற்றுக்கிழமை தனது முதல் தலித் முதல்வராக தேர்வு செய்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங்குக்கு பதிலாக சரண்ஜித் சன்னி (51) முதல்வாரக தேர்ந்தெடுக்கப்பட்டுள்லார். சாம்கூர் சாஹிப்பின் சட்டமன்ற உறுப்பினரான சன்னி, மாநிலத்தில் முந்தைய SAD-BJP அரசாங்கத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

மாநிலத்தில் தலித் பிரச்சினைகளை எழுப்புவதில் சன்னி குரல் கொடுத்தார். சமீபத்தில் அமரீந்தருக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அவர் ஏஐசிசி தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். மேலும், இரண்டு ஜாட் சீக்கியர்கள் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் இந்துத் தலைவர் சுனில் ஜாகரை நியமிப்பதற்கான கட்சியின் நடவடிக்கையை எதிர்த்ததால், அவர் இந்த பதவிக்கு காங்கிரஸ் தலைமையால் தேர்வு செய்யப்பட்டார். ஜாட் சீக்கிய தலைவர்களிடையே அதிகாரத்திற்கான போட்டிக்கு மத்தியில் சரண்ஜித் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது.

காங்கிரசில் இந்து மற்றும் சீக்கியர்களின் சச்சரவுகளூக்கு பிறகு, சரண்ஜித் சிங் சன்னி பெயரை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இறுதி செய்ய முடியவில்லை.

சீக்கியர் அல்லாதவர் சீக்கியர் பெரும்பான்மை மாநிலத்தின் முதல்வராக இருக்கக் கூடாது என்ற வேண்டுகோளின் பேரில் ஜாகரின் பெயரை ரந்தாவா எதிர்த்தார். அவருடைய கருத்து பார்வையாளர்கள் குழுவால் கேட்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்துவதற்காக அவரது வீட்டிற்கு அழைத்த போதிலும் அவரது பெயர் இறுதி செய்யப்படவில்லை.

அமரீந்தர் சிங் சனிக்கிழமை முதல்வர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவை சந்தித்து ஒரு நீண்ட கூட்டத்தை நடத்திய சித்து, ஒரு ஜாட் சீக்கியரை முதல்வராக்க வேண்டும் என்றால், அது அவராகவே இருக்க வேண்டும் என்று கூறியது அவர்களைக் கவர்ந்ததாக அறியப்படுகிறது. சித்துவை முதல்வராக்க வேண்டும் என்றால் கேபிநெட் அமைச்சர் பாரத் பூஷண் ஆஷூவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிப்பது பற்றிய விவாதமும் நடந்தது. அவருக்கு மாற்றாக கட்சி எம்பி டாக்டர் அமர் சிங்கின் பெயரை அவர் பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது. டாக்டர் அமர் சிங் சித்துவின் ஆலோசகராகவும் உள்ளார். இருப்பினும், இந்த சந்திப்புக்குப் பிறகு, கலவரமான சித்து சந்திப்பு நடந்த ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியேறினார். அவர் ஊடகங்களுடன் பேச மறுத்துவிட்டார்.

முன்னாள் பாஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாகருக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலையில் ராஜ்யசபா எம்பி அம்பிகா சோனி முதல் இடத்தைப் பிடிப்பதன் மூலம் கட்சியின் முன்னோடிகள் நாள் முழுவதும் மாறிக்கொண்டே இருந்தனர்.

இருப்பினும், சோனி ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும், சீக்கியர் மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாபில் கட்சியின் பாரம்பரியமாக இருந்ததால் முதல்வராக வேண்டும் என்றும் கூறினார்.

எம்எல்ஏக்களிடம் அவர்கள் விரும்பும் முதல்வர் பற்றி கருத்து கேட்ட பிறகு கட்சி இறுதி பெயரை முடிவு செய்தது. பார்வையாளர்கள் பல எம்எல்ஏக்களை அழைத்தனர். அதிகபட்சமாக 41 எம்எல்ஏக்களின் தேர்வாக ஜாகர் மாறிவிட்டார். மேலும், 17 எம்எல்ஏக்கள் ரந்தாவா மற்றும் ஒன்பது பரிந்துரைக்கப்பட்ட எம்.பி. பிரீனீத் கவுரின் பெயரைத் எதிர்பார்த்ததாகத் தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Charanjit singh channi to be next punjab chief minister congress

Next Story
2020 ல் இந்தியாவில், சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம்; தினசரி சராசரி 328 – NCRB அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com