Chargesheet spells it out: No drugs, no test, chats that didn’t add up: ஆர்யன் கானின் கைப்பேசி கைப்பற்றப்பட்ட நிலையில், அது எவ்வாறு உரிய நடைமுறையின்றி திறக்கப்பட்டது, மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் 2018 ஆம் ஆண்டு காலகட்டத்தை குறிப்பிடும் “போதைப்பொருள் குறித்த வாட்ஸ் அப் சாட்கள் (அரட்டைகள்)” எவ்வாறு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன ஆகியவை தான் கப்பலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையின்படி, ஆர்யன் கானுக்கு வழங்கப்பட்டுள்ள நற்சான்றுகள்.
குற்றப்பத்திரிகையில் உள்ள மற்ற முக்கிய காரணங்கள்: ஆர்யன் கானிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை, அவர் பயன்படுத்தியதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை, வாட்ஸ்அப் அரட்டைகள் போதைப்பொருள் பரிவர்த்தனைக்கு வழிவகுக்கவில்லை மற்றும் அவர் போதைப்பொருள் உட்கொண்டதாக எந்த சாட்சியும் கூறவில்லை.
“…ஆர்யன் கானின் மொபைல் போன் முறையாக கைப்பற்றப்படவில்லை…அவரது ஃபோனில் இருந்து மீட்கப்பட்ட அரட்டைகள் எதுவும் அவரை தற்போதைய வழக்குடன் குற்றம்சாட்ட போதுமானதாக இல்லை. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை மற்றும் ஆர்யன் கானின் பங்கை நிரூபிக்கக்கூடிய உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதாவது ஆர்யன் கான், அர்பாஸ் ஏ மெர்ச்சன்ட் அல்லது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடனோ சேர்ந்து குற்றம் செய்துள்ளார் என்பதை இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை… எனவே, இந்த வழக்கில் ஆர்யன்கான் மீது எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்பாஸ் மெர்ச்சன்ட், தன் வசம் இருந்து மீட்கப்பட்ட 6 கிராம் போதைப்பொருள் ஆரியனுக்கானது என்று தனது எந்த அறிக்கையிலும் கூறவில்லை என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. “உண்மையில்… கப்பலில் எந்த போதைப் பொருளையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ஆர்யன் கான் எச்சரித்ததாக அர்பாஸ் மெர்ச்சண்ட் கூறியுள்ளார்” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
உரிய நடைமுறையின்றி ஆர்யனின் மொபைல் போன் எவ்வாறு திறக்கப்பட்டது என்பதையும் குற்றப்பத்திரிகை விவரித்துள்ளது. போனின் பாஸ்வேர்ட் கொடுக்க மறுத்த பிறகு, டெர்மினலில் தனது ஃபேஸ் ஐடி மூலம் தனது போன் திறக்கப்பட்டதாகவும் ஆர்யன் கூறினார். போனை திறந்த பிறகு, போதைப்பொருள் அரட்டைகள் அவரிடம் காட்டப்பட்ட நிலையில், இந்த போதைப்பொருள் அரட்டைகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்தவை என்று ஆர்யன் கூறினார்,” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆர்யன் கானின் நண்பர்களின் அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிரியேட்டிவ் எக்சிகியூட்டிவ், மானவ் சௌஹான், என்சிபியிடம், ஆர்யன் ஒருமுறை “அவர் அமெரிக்காவில் இருந்தபோது ஹாஷ் மற்றும் வீட் புகைத்ததாகவும், அதை பலமுறை வாங்கியதாகவும் கூறியுள்ளார். அவை அங்கு சட்டப்பூர்வமானது”, என்று கூறினார்.
குற்றப்பத்திரிகையின்படி, தூக்கக் கோளாறுகளைச் சமாளிக்க ”வீட்” உதவும் என்று இணையத்தில் படித்த பிறகு ஆர்யன் கான் 2018 இல் இதைச் செய்தார், என கூறப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் மற்றும் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆகியோருக்கு இடையேயான போதைப்பொருள் அரட்டையையும் NCB இன் விசாரணை கைப்பற்றியதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. “அனன்யா பாண்டே, 2019 இல் நடத்தப்பட்ட தனது போதைப்பொருள் அரட்டையைக் காட்டியபோது… வீட் தொடர்பான அரட்டைகள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டதாகவும், வேடிக்கையாக இருக்கும் முயற்சியில் இது ஒரு நகைச்சுவை என்றும் கூறினார்” என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்யனுக்கும் ஆச்சித் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபருக்கும் இடையே வீட் வடிவில் பணம் செலுத்துவது பற்றி உரையாடலைப் பரிந்துரைக்கும் மற்றொரு அரட்டையை, அது தொடர்பான பரிவர்த்தனை எதுவும் நடக்காததால் சிறப்பு விசாரணைக் குழு தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: 5 மாநில கட்சிகளுக்கு 2020-21ல் ரூ250.60 கோடி வருவாய்… முதலிடத்தில் திமுக – ஏடிஆர் தகவல்
குற்றப்பத்திரிகையில், ஆச்சித் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஆர்யனுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறினார். “மீதமுள்ள பணத்தை பொருளாக (வீட்) திருப்பிச் செலுத்துமாறு ஆர்யன் கான் கூறியதாக அவர் மேலும் கூறினார். … ஆனால் அவர் அவருக்கு (ஆர்யன் கான்) வீட் ஒருபோதும் வழங்கவில்லை, ”என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.
குற்றப்பத்திரிகையில் ஆர்யனின் நண்பர்களின் அறிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன, இதில் அமீர் பர்னிச்சர்வாலா என அடையாளம் காணப்பட்ட நபர் உட்பட, அவர்கள் NCB அலுவலகத்தில் இருந்தபோது, அர்பாஸ் மெர்ச்சன்ட் வந்து அவர்களை இந்த சூழ்நிலையில் வைத்ததற்காக மன்னிப்பு கேட்டார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீக்கப்பட்ட அவின் சாஹூ, கஞ்சாவை கப்பலில் உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்ட போதிலும், மருத்துவ பரிசோதனை இல்லாததால் பயன்படுத்தியதை உறுதிப்படுத்த முடியவில்லை… என குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரின் பெயர்கள் கைவிடப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில், “உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை… கப்பலில் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பான விவகாரம் விசாரணையின் போது வெளிப்பட்டது” என்று கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil