Advertisment

தலைமைத்துவத்துக்கு ஒரு முன்மாதிரி: ராணுவ முன்னாள் தளபதி பத்மநாபன் மரணம்

இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவ தளபதியான ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Padmanabhan

Chennai Ex Army Chief Padmanabhan dies at 83

இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவ தளபதியான ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.
சக ஊழியர்கள் மத்தியில் "பாடி" (Paddy) என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெனரல் பத்மநாபன், 43 ஆண்டுகளுக்கும் மேலான குறிப்பிடத்தக்க ராணுவ வாழ்க்கைக்குப் பிறகு, செப்டம்பர் 30, 2000 முதல், டிசம்பர் 31, 2002 அன்று ஓய்வு பெறும் வரை ராணுவத் தளபதியாக பணியாற்றினார்.
’நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெனரல் பத்மநாபன் சென்னையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) தனது 83 வயதில் காலமானார். முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் தேசத்திற்கான அர்ப்பணிப்பையும் விட்டுச்சென்றார்’, என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்து.
பத்மநாபனுக்கு மனைவி, மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். செவ்வாய்கிழமை மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என அவருக்கு நெருக்கமான ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.    
டிசம்பர் 5, 1940 இல் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த பத்மநாபன், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி (RIMC) மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) ஆகியவற்றின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் ஆவார். 
1973 இல் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் (DSSC) மற்றும் புது தில்லியின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (NDC) பட்டம் பெற்றார்.
டிசம்பர் 13, 1959 இல் பீரங்கி படையில் நியமிக்கப்பட்ட ஜெனரல் பத்மநாபன், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ராணுவத்தில் பணியாற்றினார். கசாலா ஃபீல்ட் ரெஜிமென்ட், இரண்டு காலாட்படை படைப்பிரிவுகள் மற்றும் பீரங்கி படைப்பிரிவுக்கும் கமென்டராகவும் இருந்தார்.
ஒரு மேஜர் ஜெனரலாக, அவர் மேற்குத் துறையில் காலாட்படை பிரிவுக்கு கமென்டராக இருந்தார், மேலும் லெப்டினன்ட் ஜெனரலாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு கார்ப்ஸை வழிநடத்தினார், அங்கு அவர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தார்.
சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் ராணுவ தளபதியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் சார்பில் அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, தென்சென்னை எம்.பி., தமிழச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் ப்ரார் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது முன்மாதிரியான தலைமையும், தேசத்தின் பாதுகாப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
இந்த இக்கட்டானநேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். 
Read in English: Ex-Army Chief ‘Paddy’ dies at 83
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Military
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment