கடந்த ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் மெட்ராஸ் ஐஐடி இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றிருந்தது.
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
2019 பட்டியலில் சென்னை ஐஐடி தனது மதிப்பெண் பட்டியலில், பல்வேறு தளத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ஒஐ (அனைவரையும் உள்ளடக்கிய கல்வி- Outreach & Inclusivity) கணிசமான பின்னடைவை சந்தித்தது.
2020 ஆண்டு தரவரிசைப் பட்டியலில் பின் தங்குமா ஐஐடி மெட்ராஸ்: சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் நவம்பர் 9 ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மாணவி பாத்திமா மத ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய செல்போனில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
அனைவரையும் உள்ளடக்கிய கல்வி குறித்து மெட்ராஸ் ஐஐடி பொது மக்களிடம் எளிமையாக தெளிவுபடுத்தினால் தான்,வரும் வருடங்களிலும் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் குறித்த தகவல்கள்:
உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி உலகத்தரத்திலான கல்வி நிறுவனங்களாக அவற்றை மாற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் 2016-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேசிய அளவில் 2019ம் ஆண்டிற்கான உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருந்தது. 2020ம ஆண்டு தரவரிசிப் பட்டியல் சில நாட்களுக்குள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த பிரிவகள்(அதாவது பல்கலைக்கழகம் , சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி - அனைத்தையும் சேர்த்து ) அடிப்படையிலும், தனித்தனி பிரிவு வாரியமாகவும் (பல்கலைக்கழகம் , சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி - தனித்தனியாக ) இந்த ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
2019ம் ஆண்டு முதல் 100 உயர்கல்வி தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி நாட்டிலே முதல் இடத்தைப் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்திலும், பாரதியார் பல்கலைக்கழகம் 21வது இடத்திலும், மெட்ராஸ் பல்கலைக்கழகம் 33 இடத்திலும், அழகப்பா பல்கலைக்கழகம் 47வது இடத்திலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 68வது இடத்திலும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் 63 இடத்திலும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 86வது இடத்திலும், பெரியார் பல்கலைகழகம் 97வது இடத்திலும் உள்ளன.
சாஸ்த்ரா, ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி, பிஎஸ்ஜி போன்ற தனியார் கல்லூரிகளும் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது என்பதும் குறிபிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.