ஆம்பன் புயல் Updates: வங்கக்கடலில் சூறாவளிப் புயல், இன்று மையம் கொள்கிறது

Cyclone Amphan, Bay of Bengal: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மேலும் வலுவடைந்து கடும் சூறாவளிப் புயலாக (ஆம்பன் புயல்) உருவெடுக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

cyclone fani

cyclone amphan at bay of Bengal Updates:  வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது . நேற்று, (16 மே அன்று) காலை ஐந்தரை மணிக்கு அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்; திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

 

இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று கடும் சூறாவளிப் புயலாக (ஆம்பன் புயல்) உருவெடுக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் புதுவையில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ஆம்பன் புயல் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Live Blog

Cyclone Amphan updates : ஆம்பன் புயல் தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.


10:16 (IST)17 May 2020

மே 19-20 நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் மே 18 மாலை முதல் ஆங்காங்கே சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே19 அன்று ஒரு சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும்.  கங்கை நதி பாயும் மேற்குவங்கப்பகுதிகளில் 2020, மே19 அன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான, வெகு பலத்த மழை வரை பெய்யக்கூடும். 2020, மே 20 அன்று சிற்சில பகுதிகளில் ஆங்காங்கே வெகு பலத்த மழை பெய்யக்கூடும்.

10:13 (IST)17 May 2020

ஒடிசா, மேற்கு வங்கம் அந்தமான் & நிக்கோபார் தீவுகளுக்கு மழை எச்சரிக்கை அறிவிப்பு

2020, மே17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற்கு முகமாக நகர்ந்து, மீண்டும் வங்காள விரிகுடாவில் வடமேற்கு திசையில் வடக்கு வடகிழக்கு முகமாகத் திரும்பி, 2020, மே18 முதல் 20 வரை மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகரக் கூடும்.

10:04 (IST)17 May 2020

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று கடும் சூறாவளி புயலாக உருவெடுக்கிறது.  இது தமிழகத்தில் கரையை கடக்காது. ஏனெனில் இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிக்கும். ஒடிசா அல்லது வங்கதேசத்தில் இது கரையை கடக்க கூடும். இதனால், வெப்ப சலனம் காரணமாக தமிகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும். அதேநேரம், வட கிழக்காக செல்லாமல், வடக்கு நோக்கி நகர்ந்தால் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அரபிக் கடலில் உள்ள காற்றின் ஈரப்பதத்தை இந்த புயல் இழுக்கும் காரணத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

Cyclone Amphan updates : சூறாவளிப் புயலால் தெற்கு அந்தமான் கடல் பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு உகந்த சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai rains orissa cyclone amphan at bay of bengal live updates

Next Story
Corona Updates: சலூன்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள் திறக்க தடை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com