Advertisment

காஷ்மீர் கல்வீச்சு சம்பவம் : சென்னை இளைஞர் திருமணி பலி!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumani Dead in Kasmir-horz

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த திருமணி என்ற இளைஞர் பலியானார்.

Advertisment

சென்னையைச் சேர்ந்த ராஜவேல் என்பவரின் மகன் திருமணி குடும்பத்துடன் சுற்றுலா பயணமாக காஷ்மீர் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது நேற்று ஸ்ரீநகரில் இருந்து குல்மார்க் பகுதிக்கு சென்றார். அப்போது நர்பால் என்ற இடத்தில் அரசுக்கு எதிராக நடந்த கல்வீச்சு சம்பவத்தில் திருமணி பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Thirumani Dead in Kasmir கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை இளைஞர் திருமணி

இந்தச் சம்பவத்தில் திருமணியின் முகம் மற்றும் தலை மீது கற்கள் பலமாக விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

kashmir stone pelting - boy dead ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா மறைந்த திருமணி தந்தைக்கு ஆறுதல் கூறினார்

நேற்று மருத்துவமனையில் திருமணியின் தந்தையை சந்தித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா மஃப்டி ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவமானத்தால் தான் கூனிக் குறுகுவதாக அவர் தெரிவித்தார். இதயத்தை பிளக்கச் செய்யும் இந்தச் செய்தி கவலை தரக் கூடியது என்றும் அவர் கூறினார்.

,

,

ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, தனது தொகுதியில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய குண்டர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது திருமணியின் உடலைச் சென்னை கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இவரின் உடல் இன்று மாலை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment