Advertisment

ஆன்லைன் செயலி நிறுவனத்திடம் ரூ.500 கோடி பெற்ற முதலமைச்சர்: அமலாக்கத் துறை அறிக்கை

ராஜஸ்தானில் நிச்சய தோல்வியை பாரதிய ஜனதா எதிர்கொள்ள உள்ள நிலையில் நரேந்திர மோடி கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தி உள்ளார்” எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
ED arrests Chhattisgarh CM Bhupesh Baghels aide

சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகல்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியின் விளம்பரதாரர்கள் ரூ.508 கோடி வரை முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு செலுத்தியதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை (நவ.3) தெரிவித்துள்ளது.

இந்த வாக்குமூலம் அளித்தவர் அசிம் தாஸ் ஆவார். இவரிடம் ரூ.5.39 கோடி பிடிபட்ட நிலையில், விசாரணைக்கு பின்னர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமலாக்கத் துறை அளித்துள்ள அறிக்கையில், “அசிம் தாஸை விசாரித்ததில் இருந்தும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட தொலைபேசியின் தடயவியல் பரிசோதனையிலிருந்தும், ஷுபம் சோனி (மஹாதேவ் நெட்வொர்க்கில் குற்றம் சாட்டப்பட்ட உயர் பதவியில் உள்ளவர்) அனுப்பிய மின்னஞ்சலை ஆய்வு செய்ததில் இருந்தும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது. கடந்த காலங்களில் வழக்கமான பண கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 508 கோடி ரூபாய் மகாதேவ் APP விளம்பரதாரர்களால் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், “ராஜஸ்தானில் நிச்சய தோல்வியை பாரதிய ஜனதா எதிர்கொள்ள உள்ள நிலையில் நரேந்திர மோடி கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தி உள்ளார்” எனக் கூறியுள்ளது.

இந்த வழக்கில் ஆகஸ்ட் மாதம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ராய்ப்பூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மிகப்பெரிய அளவில் ஹவாலா நெட்வொர்க் ஆக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் வாசிக்க : Chhattisgarh CM Bhupesh Baghel was paid Rs 508 crore by Mahadev app promoters, claims ED

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Congress Chhattisgarh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment