scorecardresearch

சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்; 10 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள், ஒரு ஓட்டுநர் என 11 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

Maoist attack in Chhattisgarh today, dantewada maoist attack, chhattisgarh maoist attack, சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல், 10 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழப்பு, தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள், ஒரு ஓட்டுநர் என 11 பேர் உயிரிழப்பு, chhattisgarh naxal attack, IED blast bastar, bastar maoist naxal attack, chhattisgarh live updates, chhattisgarh naxal attack live updates
சத்திஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்; 10 பாதுகாப்பு படையினர் உள்பட 11 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் புதன்கிழமை பிற்பகல் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் மற்றும் 1 பொதுமக்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் புதன்கிழமை மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 10 பாதுகாப்பு படையினர் மற்றும் ஒரு ஓட்டுனர் கொல்லப்பட்டனர். தெற்கு சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடாவில் உள்ள அரன்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட பாதுகாப்பு படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்ட மாநிலப் படையான மாவட்ட ரிசர்வ் போலீஸ் டி.ஆர்.ஜியைச் சேர்ந்தவர்கள்.

அரன்பூரில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள டி.ஆர்.ஜி குழு ஒன்று புறப்பட்டது. இவர்கள் தங்கள் தலைமையகத்திற்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரன்பூர் சாலையில் ஐ.இ.டி வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Chhattisgarh maoist attack 10 policemen one civilian killed in dantewada