scorecardresearch

நம்பிக்கை நாயகன்: இடது காலால் பிளஸ் டூ தேர்வு; ஆசிரியர் பணிதான் லட்சியம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனது இடது காலால் தேர்வுகளை எழுதி பலருக்கும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளித்துள்ளார் மாற்றுத் திறனாளி மாணவர் மகேஷ் சிங்.

Chhattisgarh: student writes board exams with left leg Tamil News
When asked about his inspirations, he said: “There are many people who have inspired me but it is my cousins who work in the farms, and looking at them I feel that even I should do something in my life.”

Chhattisgarh Tamil News: 17 வயது மாற்றுத் திறனாளி மாணவரான மகேஷ் சிங் தனது பன்னிரண்டாம் வகுப்பு (HSC) பொதுத்தேர்வை இடது காலால் எழுதி, பலருக்கும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் வசித்து வரும் இவர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஃபோகோமெலியா (கைகள் மற்றும் கால்களின் குறைபாடு) என்ற அரிய ஊனத்தால் அவதிப்படுகிறார். இதனால், அவர் தனது பள்ளிப்படிப்பை தொடங்கியது முதல் இடது காலால் எழுதத் தொடங்கி இருக்கிறார்.

மகேஷ் சிங்கின் தந்தை அவர் குழந்தையாக இருந்தபோதே இறந்துவிட்டார். தற்போது அவர் தனது தாயுடன் வசிக்கிறார் மற்றும் அவரது சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தனது படிப்பைத் தவிர, தன் தாய்க்கு விவசாயத்தில் உதவி செய்து வருகிறார். தற்போது 12ம் வகுப்பு கலை பிரிவில் படித்து வரும் மகேஷ் சிங், பொதுத்தேர்வுகள் எளிமையாக இருந்ததாகவும், அவர் 70 சதவிகிதம் மதிப்பெண் பெறுவார் என்று நம்புவதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “தேர்வுக்கு தொடர்ந்து எழும் போது கால் வலிக்க ஆரம்பிக்கும். இருப்பினும், பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில்களை முடித்து விடுவேன்.” என்று கூறியுள்ளார். எனினும், இடது காலால் எழுதும் அவரது கையெழுத்து (புகைப்படத்தைப் பார்க்கவும்) மிகவும் தெளிவாக உள்ளது.

அவரது உத்வேகத்தைப் பற்றி கேட்டபோது, “என்னை ஊக்கப்படுத்தியவர்கள் பலர் உள்ளனர். பண்ணைகளில் வேலை செய்யும் எனது உறவினர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு நான் என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்கிறேன்.” ​​என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “எனக்கு விரைவில் இந்தி பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. மேற்கொண்டு படிக்க விரும்புகிறேன். என் அம்மாவுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது. அவருக்கு பண உதவி செய்ய விரும்புகிறேன். எனது கனவை நனவாக்க அரசு உதவும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மகேஷ் மாணவராக இருக்கும் பகவான்பூர் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆஷா குஜூர் பேசுகையில், “அந்த மாணவர் தனது பள்ளித் தோழர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் நம்பிக்கை அளிப்பரவராக இருக்கிறார். அவர் கூச்ச சுபாவமுள்ள பையன், அதிகம் பேச மாட்டார். பள்ளி அவருக்கு எல்லா வகையிலும் உதவுகிறது. அவர் பள்ளிக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Chhattisgarh student writes board exams with left leg tamil news