ஸ்விகி மற்றும் சோமாடோவில் மட்டுமல்ல, இப்போது ரயில் பயணங்களிலும் கூட சிக்கன் பிரியாணியை சாப்பிடத்தான் மக்கள் விரும்புகின்றனர். விஜய்வாடா ரயில் நிலையத்தில் அதிக பயணிகள் சிக்கன் பிரியாணியையே விரும்பி ஆடர் செய்துள்ளனர் என்று இந்தியன் ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஜயவாடா ரயில் நிலையத்தில், எல்லா மாதங்களிலும், 6,000 பிலேட் பிரியாணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லக்னோ அல்லது கொல்கத்தா, ஹைத்தரபாத்தில் இது நடைபெறவில்லை. இது விஜயவாடா ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில் ரயில் பயணங்களின்போது, 60.000 சாப்பாடு பறிமாறப்படுகிறது. கிட்டதட்ட 300 ரயில் நிலையங்களை கொண்டது. வியாபாரத்தின் அளவு கிட்டதட்ட 2 கோடி ஆகும்.
சிக்கன் பிரியாணிதான் பயணிகளின் விருப்ப பட்டியலில் முதல் இடத்திலும். இரண்டாவது தோசை, மூன்றாவது இடத்தில் இட்லி இடம் பெற்றுள்ளது. டெல்லி – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களில் நாக்பூர் ரயில் நிலையத்தில் ஆலூ பராத்தா அதிக பயணிகள் ஆடர் செய்கிறார்கள். இதுபோல, சேலம் ரயில் நிலையத்தில் அதிக பயணிகள் பொங்கலை ஆடர் செய்கிறார்கள். ஜெயின் தாலி, பூரி மற்றும் சப்ஜி, மீன் சாப்பாடும் பிரபலமாக ஆடர் செய்யப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி ஃபுட் ஆன் டிராக் சர்வீஸ் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 2,500 மேற்பட்ட உணவு வியாபாரிகள் உணவு வழங்கி வருகின்றனர். 2018 முதல் 19 வரை கிட்டதட்ட ரூ 4.5 கோடி வரை வருவாய் வந்துள்ளது. இது தற்போது ரூ .25 கோடி வரை சென்றுள்ளது.
இ- கேட்டரிங் ஆப் மூலம் விருப்பமான உணவை ரயில் பயணிகள் ஆடர் செய்ய முடியும். அவர்களது பி.என்.ஆர் நம்பரை பயன்படுத்தி உணவு ஆடர் செய்யமுடியும்.
இதுபோல ஐ.ஆர்.சி.டி.சி சமூபத்தில் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆடர் செய்யும் முறை அறிமுகப்படுத்தி உள்ளது.