Advertisment

சிதம்பரத்தின் 74 பிறந்த நாள்: எந்த 56ம் உங்களைத் தடுத்த நிறுத்த முடியாது - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் ஒரு பிறந்த நாள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்ததில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் அன்பும், அரசியலும் ஒருங்கே பின்னப்பட்டிருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிதம்பரத்தின் 74 பிறந்த நாள்: எந்த 56ம் உங்களைத் தடுத்த நிறுத்த முடியாது - கார்த்தி சிதம்பரம்

TN Live updates : chidambaram to delhi high court

ஐஎன்எக்ஸ் மீடியா நிதிமன்றக் காவலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு இன்று 74வது பிறந்தநாள். எனவே, சிறையில் இருக்கும் தனது தந்தைக்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்ததில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் அன்பும், அரசியலும் ஒருங்கே பின்னப்பட்டிருக்கின்றன.

Advertisment

அந்த, கடிதத்ததில் உள்ள முழு விவரங்கள் இங்கே :

 

16,செப்டம்பர், 2019.

அன்புள்ள அப்பா,

நீங்கள் இன்று 74 வயதை அடைகிறீர்கள். எந்த 56 ம் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. உங்களுக்கு பெரிய கொண்டாட்டத்தில் விருப்பம் இருக்காது என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் இந்தியாவில் தற்போது ஒவ்வொரு சிறு விஷயங்கும் பெரிய நிகழ்வாக மாற்றப்படுகிறது, கொண்டாட்டப் படுகிறது. நீங்கள் எங்களோடு இல்லாது பிறந்த நாள் எங்களுக்கு ஒரு துயர அனுபவத்தைத் தான் தருகிறது. நீங்கள் இல்லாதது , எங்களது இதயத்தை கணக்க செய்கிறது, நீங்கள் மிகவிரைவில் வீட்டிற்கு வந்து கேக் வெட்டுவோம் என்பதையே  நான் விழைகிறேன்.

உங்களுக்கு தினரசி நாளிதழ் மற்றும் நிர்பந்தனைக்கு உட்பட்ட தொலைக் காட்சியைப் பார்க்க விட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று நீங்கள் சொன்ன பத்திரிக்கை சுதந்திரம் கேள்விகுறியாக்கப் பட்டுள்ளதால், நாட்டின் நடந்த நிகழ்வுகளை மிகவும் விரைவாய் நானே  உங்களிடம் சொல்ல விரும்பிகிறேன்.

இந்தியாவின் அறிவியல் துறை பெருமைப்படும் செயலான லேண்டர் விக்ரம் கடந்த வாரம் நிலவில் தரையிறக்க சந்திரயான் 2 மிஷன் முயற்சித்தது.  நீங்கள் வீட்டில் இருந்திருந்தால் அதன் நேரடி ஒளிபரப்பைக் காண மிகவும் ஆர்வப் பட்டிருப்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அந்த நேரடி ஒளிபரப்பை பெருமையுடன் காண நாங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருந்திருக்கின்றோம். ஆனால், அந்த நேரடி ஒளிபரப்பில் நாங்கள் சில அசாதாரன சூழலையும், நாடகத்தையும் கண்டோம். லேண்டர் விக்ரம் பற்றி நான் இங்கு விவரிக்க வரவில்லை. ஆனால்,  தரையிறங்க வில்லை என்ற தவிப்பில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவனை இந்தியப் பிரதமர் தனது வழக்கமான பாணியில் தலையை அணைத்தபடி கட்டியணைத்தார். விண்வெளி பயணம், பிளாஸ்டிக் சர்ஜெரி போன்ற சாதனைகளை  எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது,இன்றைய இஸ்ரோ அறிவியல் எல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்லும் பிரதமரின் பக்த கோடிகளிடம், இஸ்ரோவின் பெருமைகளையும், அதன் சாதனைகளையும் இந்தயப் பிரதமர் விவரிப்பார் என்பதையும்  நாங்கள் நம்புகிறோம் அப்பா. இதையெல்லாம் தாண்டி, கடந்த வாரம் பியுஷ் கோயல்  க்ராவிட்டி கண்டு பிடித்த பெருமையை நியூட்டன் இருந்து பிடுங்கி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனிடம் கொடுத்தார்.

பிரகாஷ் ஜவேத்கர் மோடி அரசின் நூறு நாள் சாதனை விளக்குவதற்காக  செய்தியாளர்களின் சந்தித்த நிகழ்வை  நீங்கள் தவரவிட்டீர்கள் அப்பா. கடந்த ஆறு வருடங்கள் இல்லாத அளவில் ஜிடிபி 5% வந்திருப்பதை, தொடர்ந்து பத்து மாதங்களாக ஆட்டோ உற்பத்தியில் சரிவை சந்தித்து வரும் நிலையை, கடந்த வாரத்தில் சென்செக்ஸ் வரலாறு காணாத பின்னடைவை -  பிரகாஷ் ஜவேத்கர் கொண்டாட்டமாய் பத்திரக்கைகளிடம் சொன்னதை நீங்கள் பார்த்திருக்கலாம் அப்பா. இன்றைய இளைய தலைமுறையினர்கள் ஓலா வை விரும்புவதால் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதாக நிர்மலா சீதாராமனின் வாதத்தை நீங்கள் கண்டிப்பாய் பாராட்டி இருந்திருப்பீர்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம் அப்பா.

காஷ்மீரில் நடந்த நல்ல செய்திகளை சொல்கிறேன் அப்பா . இனிமேல், மத்தய அரசாங்கம் நேரடியாக காஷ்மீரில் இருந்து ஆப்பிளைக் கொள்முதல் செய்யப் போகிறோம் என்று அறிவித்துள்ளது. இந்த அரசாங்கம் கஷ்மீர் ஆப்பிளுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது. அடுத்து என்ன? கம்பளத்திற்கு சுதந்திரமா? காஷ்மீரின் அவலங்களை அம்மக்களை விடுத்து  உங்களால் மட்டுமே நன்கு புரிந்துக் கொள்ள முடியும். ஏனெனில், நீங்கள் இருவரும் தான் அநீதியாய் அடைக்கப் பட்டு இருக்கின்றீர்கள். இந்த அரசாங்கத்தால் அவர்களின் வாழ்க்கை இருளை பார்க்கும்பொழுது உங்களது தற்காலிக நிலை பரவாயில்லை என்றே சொல்லலாம்.

தற்போது சிறையில் இருக்கும் உங்களைப் பார்க்கவோ, உங்கள் பெயரில் உலக மக்களுக்கு ட்வீட் மூலம் உங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவோ எங்களால் முடிகிறது. ஆனால்........ உச்ச நீதிமன்றத்தின் ஒரு ஆணையை உங்களிடம் இங்கு சொல்கிறேன் அப்பா: அதாவது, காஷ்மீரில் தங்களின் சகாக்களை சந்தித்து திரும்பும்  அரசியல் தலைவர்கள் பத்திரிக்கைகளில் காஷ்மீர் பற்றி எதுவும் பேசக் கூடாதாம் .

எனவே, எதுவும் சாதகமில்லை, சாத்தியப்பட போவதில்லை  என்று தெரிந்தும்  இரண்டாவது இன்னிங்க்ஷை கொண்டாடும் பாஜக அரசிற்கு, உங்களை அமைதிபடுத்தி, குரலை ஒடுக்க இதை விட நல்ல நேரம் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த உலகின் மறுப்பக்கம் இருக்கும் பிரிட்டிஷ் பார்லிமென்டை அக்டோபர் 14ம் தேதி வரை அந்த நாட்டு போரிஸ் ஜான்சன் அரசு முடிக்கியிருக்கிறது. ஒருவேளை, போரிஸ் ஜான்சன் இந்த யுக்தியை இந்தியப் பிரதமரிடம் இருந்து கற்றுக் கொண்டாரோ? என்றே தோன்றுகிறது.

ஆனால், சபாநயாகர் பதவி விலகியும்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான யுக்திகளால் அங்குள்ள அரசின் முடிவை எதிர்த்துப் போராடினர், போராட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். அரசை எதிர்ப்பதற்கு பெரும் துணிவு வேண்டும், ஏனெனில் அரசை விமர்சிக்கும் உங்களை பாகிஸ்தானிற்க்கு செல்ல சொல்வதும் , இன்னும் மோசமாக சிபிஐ யை ஏவும் அரசுகள் தான் இந்த உலகில் இருக்கின்றது.

இதற்கிடையில் அஸாம்  மாநிலத்தில் என்ஆர்சி லிஸ்ட் வெளியானதால், இந்த அரசை சாதகமில்லா சூழலில் நிற்கின்றது என்றே சொல்ல வேண்டும். என்ன போதுமான இஸ்லாமியர்கள் இல்லையா ? மீண்டும் டேட்டடவை பார்க்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கு தேவைக்கு ஏற்பார் போல் டேட்டாவை செயல்பட நினைக்கிறார்கள். கற்பனையாய் பொய் கதை கட்டும் திறனில் மட்டும் இந்த அரசாங்கத்தை நான் நன்கு பாராட்டுவேன். மர்மான வங்கி கணக்கில் கோடி ருபாய் இருக்கின்றது என்கிறார்கள். நானும் அந்த கோடிகளை பார்க்கவே விரும்பிகிறேன் அப்பா.

கடந்த மூன்று மாதம் கடுமையான் சீனா அரசாங்கத்திற்க்கு எதிராக போராட்டம் நடத்தி ஹாங்ஹாங் மக்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கும் என்று நான் நம்புகிறேன் அப்பா . கோழையான உயிர் வாழ்வா?அல்லது  சுதந்திரமா? என்ற கேள்வி என் முன்வைக்கபட்டால் நான் சுதந்திரத்தையே தேர்தேர்டுப்பேன் என்று சொல்லும் உங்களுக்கு இந்த ஹாங் ஹாங் செய்தி நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கும் என்று நான் உணர்கிறேன். 'ஒப்பற்ற ஜனநாயக நாடு' என்று சொல்லும் இந்தியாவிற்கு அந்த ஹாங் ஹாங் அறப்போராட்டம் என்ன பாடம் கற்று கொதித்திருக்கும்? என்ற வினாவும் உங்களுக்கு  வந்திருக்கும் அப்பா. உச்சநீதிமன்றமே நமது தான் என்ற பாஜக எம்எல்ஏ பிஹாரி வர்மா சொன்ன வார்த்தையும் உங்கள் கண் முன்னே வந்திருக்கும் அல்லவா?

மற்றும் ஒரு செய்தியில் ரஃபேல் நடால் மெத்தவதேவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். தனக்கு சாதகமில்லா பிட்சிலும் இந்த வெற்றியை சொந்த மாக்கினார் ரஃபேல் . நீங்கள் வீட்டில் இருந்திருந்தால், நாம் ஒன்றாக சேர்ந்து பார்த்திருப்போம் அல்லவா ? .அந்த போட்டி முடிந்த பின்பு  ரஃபேல் நடால் எதிரில் விளையாடிய மெத்தவதே விற்கு கைகொடுத்து வாழ்த்தை பகிர்ந்துக் கொண்டார். நாகரிக வாழ்வில் எதிராளிக்கு கை கொடுப்பது தான் முறை, தண்டிப்பதோ, தவிர்ப்பதோ  அல்ல.

நீங்கள் விரைவில் இந்த அரசியல் முடுச்சுகாளால் போடப்பட்ட சூழ்ச்சிகளில் இருந்து வெளி வந்து உண்மையை உலகிற்கு எடுத்துரைப்பீர்கள் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

பாசத்திற்குரிய,

கார்த்தி

Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment