கார்த்தியின் தொழிலுக்கு உதவி கேட்டார் ப.சிதம்பரம் – இந்திராணி முகர்ஜி

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதலுக்கு ஈடாக வெளிநாட்டு பணம் அனுப்புவதன் மூலம் தனது மகன் கார்த்திக்கு உதவுமாறு முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் கேட்டதாக, இந்திராணி முகர்ஜி பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tamil Nadu news today live updates,

Chidambaram asked us to help Karti’s business – Indrani Mukerjea: ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதலுக்கு ஈடாக வெளிநாட்டு பணம் அனுப்புவதன் மூலம் தனது மகன் கார்த்திக்கு உதவுமாறு முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் கேட்டதாக, இந்திராணி முகர்ஜி பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ப.சிதம்பரமும் அவரது மகனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இந்திராணி முகர்ஜி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், தானும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சிதம்பரத்தை டெல்லியில் வடக்குப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

பீட்டர் முகர்ஜி ப.சிதம்பரத்துடன் உரையாடலைத் தொடங்கியதும், அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவதற்கான ஐ.என்.எக்ஸ் மீடியாவின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்டதோடு விண்ணப்பத்தின் நகலை ப.சிதம்பரத்திற்கு வழங்கினார்.

இந்த சிக்கலைப் புரிந்து கொண்ட பிறகு, ப.சிதம்பரம் தனது மகன் கார்த்திக்கு அவரது தொழிலில் உதவவும், எஃப்.ஐ.பி.பி. ஒப்புதலுக்குப் பதிலாக வெளிநாட்டு பணம் அனுப்ப செய்யும்படி பீட்டரிடம் கூறினார் என்று இந்திராணி தனது அறிக்கையில் கூறியுள்ளதாக பி.டி.ஐ குறிப்பிட்டுள்ளது.

தற்போது பிரிந்து வாழும் இந்த தம்பதிகள் ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமத்தின் விளம்பரதார்களாக இருந்தனர். மேலும், அவர்களது மகள் ஷீனா போராவைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

2008 ஆம் ஆண்டில், எஃப்.ஐ.பி.பி ஒப்புதல் கோரிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட பின்னர், அவர்கள் சிதம்பரத்தை அணுக முடிவு செய்ததாக இந்திராணி கூறினார்.

“எஃப்.ஐ.பி.பி தொடர்பான இந்த சிக்கல்களைத் தீர்க்க கார்த்தி சிதம்பரத்தின் உதவி மற்றும் ஆலோசனையுடன் இந்த குற்றச்சாட்டு மீறல்களை முறைப்படுத்த முடியும் என்று பீட்டர் கூறினார்” என்று முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தம்பதிகள் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் கார்த்தியை சந்தித்ததாகக் கூறினார்.

“கார்த்திக்கு இந்த விவகாரம் பற்றி தெரியும், இந்த விஷயத்தை தீர்ப்பதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவருக்கு அல்லது அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான வெளிநாட்டு கணக்கில் மாற்ற முடியுமா என்று கேட்டார். வெளிநாட்டு பரிமாற்றம் சாத்தியமில்லை என்று பீட்டர் சொன்னபோது, கார்த்தி 2 நிறுவனங்களின் பெயர்களை, செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் ஆகியவற்றின் வங்கி கணக்குகளில் விரும்பிய கொடுப்பனவுகளுக்கு மாற்றாக பரிந்துரைத்தார், மேலும், அவர்கள் தங்களை ஐ.என்.எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக முன்வைப்பார்கள்”  என்று இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த கொடுப்பனவுகள் பீட்டர் முகர்ஜியால் கையாளப்பட்டன என்றும், ப.சிதம்பரம் தனது மகனுக்கு உதவும் ஆர்வத்தில் பேசியதற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றும் இந்திராணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் குழுமத்தின் குழு இயக்குனர் (சட்ட மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள்) கார்த்தியின் நிறுவனமான செஸ் மேனேஜ்மென்ட்டுடன் எஃப்.ஐ.பி.பி தொடர்பாக பேசினார் என்றும் கார்த்தியுடன் இணைக்கப்பட்ட மற்றொரு நிறுவனம் அட்வாண்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் ASCPL, ஐ.என்.எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சேவையும் வழங்கவில்லை என்று இந்திராணி முகர்ஜி கூறினார்.

2008 ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியா ஏ.எஸ்.சி.பி.எல் நிறுவனத்திற்கு சுமார் 9.96 லட்சம் ரூபாய் செலுத்தியதாக அமலாக்கத் துறை விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் இது ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு எஃப்.ஐ.பி.பி ஒப்புதலை வழங்குவதற்கான ஒரு விரைவான தொகை என்று விசாரணை முகமை குற்றம் சாட்டுகிறது.

பீட்டர் முகர்ஜி அமலாக்கத்துறை விசாரணை அதிகாரிகளிடம் தனது அறிக்கையில் கூறுகையில், அவர் இரண்டு அல்லது மூன்று முறை சிதம்பரத்தை சந்தித்ததாகவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சந்திப்புகள் தங்கள் ஊடக வணிகத்தின் மாற்றம் பற்றி விளக்கமளிப்பதற்கு மரியாதை நிமித்தமான அழைப்புகள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் சிதம்பரத்தை சந்தித்ததாகவும் பீட்டர் முகர்ஜி கூறினார். “அவர்களுடைய விண்ணப்பத்தில் எந்தவிதமான பிடிப்பும் தாமதமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கும், வெளிநாட்டு பணம் செலுத்துவதற்கு. ஏதேனும் வாய்ப்பு ஏற்பட்டால் சிதம்பரம் தனது மகனின் வணிக நலன்களை மனதில் கொள்ளும்படி கேட்டார்” என்றும் பீட்டர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், அவர், அவரது மனைவியுடன் சென்று டெல்லியில் ஹயாத்தில் கார்த்தியை மற்றொரு நபருடன் சந்தித்ததாக கூறியுள்ளார். மேலும், கார்த்தியை புதிய எஃப்.ஐ.பி.பி ஒப்புதல்களைப் பெறுவதற்கு தான் சந்தித்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்தி தரப்பில், 1 மில்லியன் அமெரிக்க டாலர் கோரியதாகவும், இது சாத்தியமில்லை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டபோது, தனது நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்ததாக பீட்டர் முகர்ஜி கூறியுள்ளார்.

மேலும், ஹயாத்தில் நடந்த சந்திப்பின் போது செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் கார்த்தியால் பரிந்துரைக்கப்பட்டது என்று பீட்டர் கூறினார். அதோடு, “ஐஎன்எக்ஸ் மீடியா ஏ.எஸ்.சி.பி.எல் நிறுவனத்திற்கு செலுத்திய ரூ .10 லட்சம் கார்த்தி கோரிய 1 மில்லியன் அமெரிக்க டாலரின் ஒரு பகுதியாகும்” என்று பீட்டர் கூறியுள்ளார்.

இருப்பினும், கார்த்தியின் நிறுவனத்தைக் கையாண்ட அவரது நிர்வாகி, அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அவர்களின் முடிவில், மனதில் மாற்றம் இருப்பதாகவும், பணம் செலுத்துவதற்கான வேறு வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் பீட்டர் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chidambaram asked us to help kartis business make overseas payments indrani mukerjea

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com