Advertisment

19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன ? சிதம்பரம் ட்வீட்

இன்று ப.சிதம்பரத்தின் ட்வீட்  என்.ஆர். சி லிஸ்டில் விடுபட்ட  19 லட்சம் மக்களை பற்றியதாக இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன ? சிதம்பரம் ட்வீட்

Tamil Nadu news today in tamil

இந்திய குடிமக்களை கணக்கிடுவதற்காக பிரத்தியோகமாக உருவாகாப்பட்டது தான் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு ). முதன்முதலில் 1951 இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும்  கணக்கெடுத்தது. பின், இந்தியா முழுவதும் கணக்கெடுப்பதை விட்டுவிட்டது. வங்கதேசத்தில் இருந்தும், மற்றும்  இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக அசாம் மாநிலத்தில்  நுழைபவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் மட்டும்  என்.ஆர்.சி புதுப்பித்தது மத்திய அரசு. 1971க்குப் பிறகு அசாமிற்க்குள் நுழைந்த  19 லட்சத்து 6 ஆயிரத்து 657 நபர்களின் பெயர்கள் இந்த புதிபித்த  என்.ஆர்.சி லிஸ்டில் இடம் பெறவில்லை.

Advertisment

இவர்கள் பங்களாதேஷ்ற்கு நாடு கடத்தப்படுவார்களா ? அல்லது இந்தியாவிலே அகதிகள் போல் தங்க வைக்கப்படுவார்களா (19 லட்சம் அகதிகள் கற்பனையிலும் எட்டாத ஒன்று  ) ? என்ற கேள்வி அனைவரின் மனதையும் படபடக்க வைக்கின்றது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தனது சார்பாக ட்வீட் செய்யுமாறு தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, அவ்வபோது அவரது அக்கவுண்டில் இருந்து ட்வீட் வந்த வண்ணம் இருக்கின்றன.

இன்று அவரின் ட்வீட்கள் என்.ஆர். சி லிஸ்டில் விடுபட்ட  19 லட்சம் மக்களை பற்றியதாக இருந்தது.

19 லட்சம் மக்களுக்கு என்ன பதில், இந்த அரசாங்கம் வைத்திருக்கின்றது. என்.ஆர். சி யில் இடம் பெறாத  19 லட்சம் இந்தியாவின் குடிமக்கள் இல்லை என்பது சட்ட பூர்வமான நடவடிக்கை என்றால்,  இவர்களை வரைமுறைபடுத்த எந்த விதமான சட்டதிட்டங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்பது போல் அவரது கேள்விகள் இருந்தன.

இந்நிலையில்,  கடந்த வாரம், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு அரசு முறை சுற்று பயணமாக வந்திருந்தார். அஸ்ஸாமில் என்.ஆர்.சி அமல்படுத்தப்படுவது குறித்து அவரிடம் கேட்டதற்கு,  "ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் நரேந்திர மோடி  என்.ஆர்.சி செயல்முறையைக் கண்டு  கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லியதால், நான் அசாம் என்.ஆர்.சியில் எந்த பிரச்சனையும் காணவில்லை,  எல்லாம் நன்றாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

P Chidambaram Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment