ரஃபேல் ஆவணங்களை திருடியவர் திருப்பி கொடுத்துட்டார் பாருங்க - ப.சிதம்பரம்

ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும்

ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுக்கு துணை நிற்கும் காங்கிரஸ்!

ரஃபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பிக் கொடுத்து விட்டார் என நான் நினைக்கிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Advertisment

ரஃபேல் வழக்கில் கடந்த புதன் கிழமை ஆஜரான மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வெள்ளிக் கிழமை ஆஜரான அவர், ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும் அது நகல் எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இது குறித்து ட்விட்டரில், “புதன் கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை திருடி சென்ற திருடன் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

Advertisment
Advertisements

அதோடு, “ரஃபேல் குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேட்டுக்கு ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது, வெள்ளிக்கிழமை ஆலிவ் பிரான்ச் சட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ப.சிதம்பரத்தின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

P Chidambaram Rafale Deal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: