ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது. ஏறக்குறைய 15 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார்.
அதேபோல், மலேசியாவில் இயங்கி வந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அதற்கு ப.சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.
அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (Foreign Investment Promotion Board) தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக மேக்சிஸ் நிறுவனம் கார்த்தியின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணத்தினை பரிவர்த்தனை செய்ததாகவும் அமலாக்கத்துறையினர் மற்றும் சி.பி.ஐ அமைப்பு இவர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன் நடந்து வருகிறது. சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறையில் உள்ள சிதம்பரத்தின் ட்வீட்டர் பக்கத்தில் இன்று பதிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சிதம்பரம் கூறியுள்ளதாவது:
எனது குடும்ப உறுப்பினர்களிடம் எனக்காக ட்வீட் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி வெளியாகியுள்ள ட்வீட் அதன் விவரம்: ‘‘இந்த வழக்கில் பல அதிகாரிகள் உங்களுக்கு பரிந்துரைகளையும் ஒப்புதலையும் வழங்கினார்களே, அவர்கள் கைது செய்யப்படவில்லை. நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்’’ என பலரும் கேட்கின்றனர்.
9, 2019I have requested my family to tweet on my behalf the following :-
People have asked me 'If the dozen officers who processed and recommended the case to you have not been arrested, why have you been arrested? Only because you have put the last signature?'
I have no answer.
— P. Chidambaram (@PChidambaram_IN)
I have requested my family to tweet on my behalf the following :-
— P. Chidambaram (@PChidambaram_IN) September 9, 2019
People have asked me 'If the dozen officers who processed and recommended the case to you have not been arrested, why have you been arrested? Only because you have put the last signature?'
I have no answer.
ஏனெனில் நீங்கள் கடைசியாக கையெழுத்தை போட்டுள்ளீர்கள்? ஆனால் "என்னிடம் பதில் இல்லை" என அந்த ட்வீட்டில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் "எந்த அதிகாரியும், எந்த தவறும் செய்யவில்லை. யாரும் கைது செய்யப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை" என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
9, 2019No officer has done anything wrong. I do not want anyone to be arrested.
— P. Chidambaram (@PChidambaram_IN)
No officer has done anything wrong. I do not want anyone to be arrested.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 9, 2019
இந்த ட்வீட்டுகளை அவர் ஹிந்தியிலும் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.