உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்க உள்ளார். இவர் அடுத்த மாதம் நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யூ.யூ., லலித், வரும் நவம்பர் 8ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். முன்னதாக தலைமை நீதிபதி யூ.யூ., லலித் செவ்வாய்க்கிழமை (அக்.11) காலை அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி தனஞ்ஜெய யஷ்வந்த் சந்திரசூட்-ஐ பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரையை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து நாட்டின் 50ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட், நவம்பர் 9ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
தற்போதைய தலைமை நீதிபதி யூ.யூ. லலித்தின் பதவிக் காலம் 3 மாதத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், டி.ஒய். சந்திரசூட் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தொடர்வார். இவரின் பதவிக்காலம் 2024 நவம்பர் 10ஆம் தேதி வரை உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியான நீதிபதி சந்திரசூட், அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப் பள்ளியில் எல்.எல்.எம் பட்டமும், சட்ட அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
முன்னாள் தலைமை நீதிபதி ஒய் வி சந்திரசூட்டின் மகனான இவர், உச்ச நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்
இவர், ஜூன் 1998 இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அவர் மார்ச் 29, 2000 அன்று பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் வரை 1998 முதல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார்,
மேலும் மகாராஷ்டிர நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அக்டோபர் 31, 2013 அன்று பதவியேற்றார், மேலும் மே 13, 2016 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில், நீதிபதி சந்திரசூட் நாட்டின் நீதித்துறையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சில மிக முக்கியமான தீர்ப்புகளை எழுதினார்.
பின்னாள்களில் ஆதார் 2016இல் ஒரு பணமசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்., புட்டசாமி vs இந்திய அரசாங்கத்துக்கு எதிரான தனியுரிமை அடிப்படை உரிமை என்ற தீர்ப்பில் தனித்துவமாக வெளிப்பட்டார்.
நவ்தேஜ் சிங் ஜோஹர் அண்ட் அதர்ஸ் வெர்சஸ் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில், ஒரே பாலின உறவை சட்டப்பூர்வமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 377 ஐ எஸ்சி குற்றமற்றதாக்கினார்.
அப்போது, இது பழங்கால மற்றும் காலனித்துவ காலச் சட்டத்தின் கட்டாயம் என்றும் பாலியல் சிறுபான்மையினர் மறைவாகவும், பயந்தும், இரண்டாம் தர குடிமக்களாகவும் வாழ வழிகோலுகிறது என்றார்.
2018இல் இவரின் தலைமையிலான அமர்வு, மகாராஷ்டிரா நீதித்துறை அதிகாரியான பி.எச்.லோயாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பிய மனுக்களை 2018 ஏப்ரலில் தள்ளுபடி செய்தது.
அப்போது, இயற்கை மரணம் என்றும், வரலாறு, மருத்துவக் கண்டுபிடிப்புகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை என அமர்வு கூறியது.
கடந்த வாரம் பெண்ணின் 24 வாரங்கள் ஆன கருக்கலைப்புக்கு அனுமதி அளித்தார். அயோத்தி வழக்கில் 5 பேர் கொண்ட நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார்.
தொடர்ந்து, கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மெய்நிகர் விசாரணைகளை சாத்தியமாக்குவதிலும், அரசியலமைப்பு பெஞ்ச்களால் விசாரிக்கப்படும் வழக்குகளில் தொடங்கி நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பைத் தொடங்குவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil